ARTICLE AD BOX
Jeeva: அகத்தியா படத்தின் கதை என்ன தெரியுமா? ஜீவா சுவாரசியப் பேட்டி!
சென்னை: நடிகர் ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் அகத்தியா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், ஜீவாவுடன் இணைந்து அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தில் தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து எமது பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்த ஜீவா படம் குறித்து பல விஷயங்களை பேசி உள்ளார்.

கேள்வி: நீங்கள் ஆரம்பத்தில் கதை கேட்டு நடித்த விதத்திலும், இப்போது நடிப்பதிலும் மாற்றம் இருக்கா?
பதில்: ரசிகர்களே மாறி இருக்கிறார்கள். இதனால், ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி தான் நடிகர்களும் மாற வேண்டும். இதனால், நான் முதல் படத்தில் நடித்தது போல இப்போதும் நடிக்க முடியாது. படத்தின் கதை சொல்லும் விதமும் மாறி இருக்கும் போது, நடிகர்களும் நிச்சயமாக மாறித்தான் ஆக வேண்டும்.
கேள்வி: அகத்தியா படத்தை தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?
பதில்: இந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும். இந்த படத்தில் கொச்சையான வசனங்களோ, ஆபாச விஷயம் என எதுவுமே இல்லை. குடும்பமாக சென்று இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்தை பார்க்கும் போது சித்தர்கள் என்றால் யார், சித்த மருத்துவம் என்றால் என்ன என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்வார்கள். இது போன்ற படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்பதால் இந்த கதை தேர்வு செய்து நடித்தேன்.
கேள்வி: ஜீவாவிற்கு போட்டியான நடிகர் யார்?
பதில்: நான் யாரையும் எனக்கு போட்டியான நடிகர்களாக பார்த்ததே இல்லை, அதுவும் இளம் நடிகர்களை நாம் போட்டியாக பார்க்கக்கூடாது. அவர்களுக்கு நாம் ஆதரவு தான் தெரிவிக்க வேண்டும். இப்போது வரும் இளம் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கூட அவர்களுடன் சேர்ந்து நடிக்க நான் விருப்பப்படுகிறேன். தற்போது வந்திருக்கும் இளம் நடிகர்களில் மணிகண்டன் நன்றாக நடிக்கிறார் என்றார்
ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவான அறிமுகமான ஜீவா. ராம், டிஷ்யூம், ஈ, சிவா மனசுல சக்தி, பொறி, கோ, கற்றது தமிழ், கொரில்லா, ரௌத்திரம், கலகலப்பு 2, கீ, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பிளாக்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.