ARTICLE AD BOX
இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி, இந்தியத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தியாகக் கூறப்படும் கருத்துகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதிலளித்துள்ளார்.
ஜோ பைடனிடமிருந்து அமெரிக்க அரசைக் கைப்பற்றிய டொனால்ட் ட்ரம்ப், பல நாடுகளுக்கு வழங்கி வந்த நிதியுதவிகளை நிறுத்தினார். அந்த வகையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர்கள் நிறுத்தப்பட்டது.
Jaishankar பேச்சு
டெல்லி பல்கலைக்கழகத்தின் இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜெய்ஷங்கர், "நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமலே, உங்கள் சிந்தனை முறைகளால் உங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். ஏனென்றால் உங்கள் மீதான தாக்கங்கள், செல்வாக்குகள், எது சரி, எது தவறு என்ற உணர்வுகள் எல்லாமும் நீங்கள் தினமும் என்ன படிக்கிறீர்கள், என்ன பார்க்கிறீர்கள் என்பதிலிருந்து மொபைலால் கட்டுப்படுத்தப்படுகிறது" எனப் பேசினார்.
மேலும், "அப்படியாக ட்ரம்ப் ஆட்சியிலிருக்கும் நபர்களால் (அரசை விமர்சிப்பவர்களைக் குறிப்பிட்டு) சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அது கவலைக்குரியதுதான்" என்றார்.
அவர், "அந்த மாதிரியான தகவல்கள் பரப்பப்படுவது நம் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான உள் நோக்கம் கொண்ட செயல். அதைச் செய்யும் அமைப்புகள் புகாரளிக்கப்பட வேண்டியவை என்பதால், அரசு இவற்றைப் பரீசலித்து வருகிறது. உண்மை வெளிவரும் என நான் நம்புகிறேன்.
#WATCH | Delhi: On USAID, EAM S Jaishankar says, "...Some information has been put out there by the Trump administration people, and obviously, that is concerning... I think, as a government, we're looking into it. My sense is that the facts will come out...USAID was allowed here… pic.twitter.com/UZT5aimfXX
— ANI (@ANI) February 22, 2025இப்போது அமெரிக்க நிதியுதவி (USAID) பற்றி பலவாறு எழுதப்படுவதைப் பார்க்கிறேன். அமெரிக்க நிதியுதவி வரலாற்றுப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதுவும் நன்னம்பிக்கை அடிப்படையில், நல்ல செயல்பாடுகளுக்காக.
ஆனால் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து தவறான நடவடிக்கைகளுக்காக நிதி அளிக்கப்படுவதாகப் பேசப்படுகிறது. இது நாம் பார்க்க வேண்டிய ஒன்றுதான். ஒருவேளை அப்படி இருந்தால், தீய செயல்பாடுகளுக்காக நிதியைச் செலவிடுபவர்கள் யார் என்பதை நாடு அறிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா அளித்துவந்த நிதி மீது விசாரணை நடத்த வேண்டும் என பாஜக குரலெழுப்பிய நிலையில் ஜெய்ஷங்கர் இவ்வாறு பேசியுள்ளார்.
Maharashtra: ``வயது வந்த மக்களை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது எப்படி?'' -ராகுல் காந்தி கேள்வி
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel