ARTICLE AD BOX
நியூயார்க்: நியூயார்க்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. 199 பயணிகளுடன் போயிங் விமானம் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு ரோம் நகருக்கு சென்றது. அமெரிக்க விமானக் குழுவினர் மற்றும் விமானிகள் வந்து சேர்ந்ததும் விமானம் மீண்டும் கிளம்பியது.
சமீப காலங்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் விமான நிறுவனங்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. ஒவ்வொரு முறை மிரட்டல் விடுக்கப்படும்போதும் இந்திய விமானங்கள் வெளிநாடுகளில் தரையிறங்குகின்றன. அங்கு முழு பரிசோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்று தெரிய வருகிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA292 உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8.20 மணிக்கு நியூயார்க்கிலிருந்து டெல்லி புறப்பட்டது. தரையிறங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் திடீரென விமானம் யுடர்ன் அடித்தது. இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நாம் யு-டர்ன் எடுத்திருக்கிறோம் என விமானி விளக்கமளித்தார்.
இதையடுத்து விமானம் ரோம் நகரின் ஃபியமிசினோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானமும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இருப்பினும் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து விமானம் பாதுகாப்பாக டெல்லிக்கு வந்து சேர்ந்தது. பாதுகாப்புக்குதான் எங்களின் முதல் முன்னுரிமை எனவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி என்று விமான நிறுவனம் தெரிவித்தது.
The post நியூயார்க்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! appeared first on Dinakaran.