ARTICLE AD BOX
மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு உடற்தகுதி இல்லை என அறிவிக்குமாறு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு கோரிக்கை வந்ததாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைச் சேர்ந்தவர்களே அவ்வாறு அறிவிக்குமாறு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக கூறப்பட்டு இருப்பதுதான் இதில் உண்மையான அதிர்ச்சி. பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு இந்த செய்தியை கசிய விட்டுள்ளார்.

கடந்த 2024 ஐபிஎல் தொடரில் 156 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இந்திய கிரிக்கெட் உலகில் ஒரே நாளில் பிரபலமானார் மயங்க் யாதவ். அடுத்து இந்திய அணியில் நேரடியாக வாய்ப்பு பெற்றார். ஆனால், கடந்த அக்டோபர் 2024 முதல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ உதவிகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மயங்க் யாதவ் இன்னும் 100% உடற்தகுதியை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மற்றொரு சிக்கலும் எழுந்துள்ளது. அந்த அணியில் இருக்கும் மற்ற இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான மொஹ்சின் கான் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரும் முழு உடல் தகுதி சான்றிதழை இன்னும் பெறவில்லை. அவர்களும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உள்ளனர்.
2025 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு அவர்களுக்கான ஒப்புதல் கிடைத்துவிடும் என நம்பப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மூன்று இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்களா? இல்லையா? என தெரியாத இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது.
போதிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததால் லக்னோ அணி தற்போது பதற்றத்தில் உள்ளது. எனவே, தான் தங்களது அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக நம்பப்பட்ட மயங்க் யாதவை, ஏலத்தில் கூட பங்கேற்க விடாமல் தக்க வைக்கப்பட்ட மயங்க் யாதவை தற்போது அவர்களே அணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அதற்காகவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு முழு உடல் தகுதி இல்லை என அறிவிக்குமாறு அழுத்தம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் இப்படி அறிவிப்பதன் மூலம் என்ன லாபம் என்றால், மயங்க் யாதவுக்கு பதிலாக வேறு ஒரு வேகப் பந்துவீச்சாளரை அந்த அணி தேர்வு செய்து கொள்ள முடியும்.
2025 ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் இருக்கும் வீரர்கள் பட்டியலில் இருந்து ஒரு வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி தேர்வு செய்து கொள்ள முடியும். அதற்கு ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதை நிரூபிக்க வேண்டும். அதற்காகவே மயங்க் யாதவுக்கு உடற்தகுதி இல்லை என அறிவிக்குமாறு நிர்ப்பந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.
IPL: கேப்டன்சியின் உச்சம்.. தோனியின் ஃபீல்டிங் ட்ரிக்.. அரண்டு போன KKR வீரர் வெங்கடேஷ் ஐயர்
இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதை மறுத்துள்ளது. மயங்க் யாதவின் உடற்தகுதி குறித்து தாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இணைந்து இருப்பதாகவும், அவர் இந்திய அணிக்கு முக்கியமானவர் என்பதால் இதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.