IPL 2025: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்..!!

5 hours ago
ARTICLE AD BOX

18வது ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பும்  போட்டியாக ஐபில் உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியின் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள்  கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். சென்னை, மும்பை , டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் போட்டி நடைபெறுகிறது. இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டில் கண் கவர் கலை நிகழ்ச்சிகளோடு இந்த சீசன் கோலாகலமாக தொடங்குகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கும் இந்த தொடரில் கோப்பை வெல்லும் மணிக்கு எவ்வளவு பரிசு அளிக்கப்படும் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த சீசனை போலவே கோப்பை வெல்லும் மணிக்கு 20 கோடியும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி பரிசு தொகையாக அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Read Entire Article