ARTICLE AD BOX
பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலம் வாய்ந்த ஆர் சி பி ஐ எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா அணியில் சுனில் நரைன், குயிண்டன் டிகாக், ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆண்ட்ரூ ரஸில், வருண் சக்கரவர்த்தி போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
இதைப்போன்ற ஆர் சி பி அணியில் பில் சால்ட், விராட் கோலி, படிக்கல், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னல் பாண்டியா, ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆர் சி பி அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "இம்முறை ஆர்சிபி அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கு காரணம் அந்த அணியின் அதிக இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த ஒரு காரணத்தினால் தான் ஆர் சி பி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும்."
"எனக்கும் விராட் கோலிக்கும் எந்த சச்சரவும் இல்லை. நான் விராட் கோலி ரசிகர்களுக்கு எதிரானவரும் கிடையாது. நான் தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் ஆர் சி பி அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் அணி நிர்வாகிகளிடம் தான் கேட்க வேண்டும்.நல்ல வீரர்களை எடுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்."
ஆர் சி பி அணியிடம் ஏலத்தில் அதிக பணம் இருந்த நிலையில் கே.எல் ராகுல் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர் பில் சால்டை 11 கோடி 50 லட்சம் ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோனை எட்டு கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் இங்கிலாந்து வீரர் ஜாக்கப் பேத்தலை 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆர் சி பி அணியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் உள்ள நிலையில், அதனை குறிப்பிட்டு தான் கில்கிறிஸ்ட் கிண்டல் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.