ARTICLE AD BOX
கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடரில் அதிக ரன்கள் அடிக்கப் போவது யார்? அதிகம் விக்கெட்டுகளை எடுக்கப்போவது யார்? எந்த அணி சாம்பியன் கோப்பையில் வெல்லும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதனை தற்போது பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடித்து நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனை படைத்தார். தொடர் நாயகன் விருதை வென்ற அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் பலரும் ரச்சின் ரவீந்திரா தான் அதிக ரன்கள் அடிப்பார் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். இதனால் வருண், ஐபிஎல் சீசனில் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட் கை வீழ்த்துவார் என்ற கணிப்பும் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிக ரன்கள் எடுக்கும் வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்திருக்கிறார். கில் இதுவரை ஐபிஎல் தொடரில் 100 இன்னிங்ஸ்கள் விளையாடி 3216 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று அதிக விக்கெட் வீழ்த்தும் வீரராக வருண் சக்கரவர்த்தியை மைக்கேல் வாகன் தேர்வு செய்திருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி இதுவரை 70 இன்னிங்ஸில் விளையாடி 83 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். கடந்த சீசனில் 14 இன்னிங்ஸில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி கே கே ஆர் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வாகன் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார் .