ARTICLE AD BOX

2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ப்ராவோ சென்னை அணியிலிருந்து வெளியேறியது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கேகேஆர் அணியிலிருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்த போது நான் முதலில் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்ன பிறகுதான் அதை ஏற்றுக் கொண்டேன். அதுதான் நான் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதை என்று கூறியுள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் கேஆர் மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடினால் என்ன மனநிலை இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதாவது, கொல்கத்தா – சிஎஸ்கே ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடினால் நான் கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்று நிச்சயமாக விரும்புவேன். இது சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் நான் ஆலோசகராக இருக்கும் இடம் அதுதான். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை தொடர என்னை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார். நான் கொல்கத்தா வெல்லவே விரும்புவேன். தோனியும் அதை புரிந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.