ARTICLE AD BOX
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில், விராட் கோலி மற்றும் பிலிப்ஸ் சால்ட் அடித்த அதிரடி அரை சதங்களை தாண்டி, மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player - MVP) என்ற பெருமையை பெற்று இருக்கிறார் க்ருனால் பாண்டியா.
இந்த போட்டியில் க்ருனால் பாண்டியா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சுனில் நரைன் மற்றும் அஜிங்க்யா ரஹானே அதிரடியாக ஆடினர். சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்திய க்ருனால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டும் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவர் பிளே ஓவர்களிலேயே 80 ரன்களை எடுத்தது. பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி அதிரடியாக ஆடினர். அவர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர். பிலிப்ஸ் சால்ட் 31 பந்துகளில் 56 ரன்களும், விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் முடிவில் அதிக மதிப்புமிக்க வீரர் யார் என பார்த்தபோது க்ருனால் பாண்டியா முதலிடத்தில் இருந்தார். ஏனெனில், அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
IPL 2025 புள்ளிப்பட்டியல் - KKR-க்கு மரண அடி.. ஆர்சிபி நம்பர் 1 மட்டுமல்ல.. அதிரடி நெட் ரன் ரேட்
அவருக்கு அடுத்ததாக சுனில் நரைன் இடம்பெற்றிருந்தார். அவர் பேட்டிங்கில் 44 ரன்களும், பந்துவீச்சில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். எனவே, ஆல்ரவுண்டராக செயல்பட்டதால் அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். அடுத்து ரஹானே, பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மூவரும் அரை சதம் அடித்து இருந்தனர்.