ARTICLE AD BOX
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல பரிட்சை நடத்துகிறது.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே காயம் காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சீசனில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டு பந்து வீசியதற்கான புகார் சிக்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என தெரிகிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை செயல்பட்டார். எனினும் எதிர்கால திட்டத்தை மனதில் வைத்து ரோகித் சர்மாவை அந்தப் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது.
அதன் பின் ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டு வரப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்டியா 2 போட்டியில் விளையாட மாட்டார் என்பதால் மீண்டும் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியை ஏற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதே போன்று இந்திய t20 அணியின் கேப்டனாக தற்போது சூரிய குமார் தான் செயல்பட்டு வருகிறார். சூரியகுமார் தலைமையில் இந்திய அணி t20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறது. ஏற்கனவே சூரியகுமார் யாதவ், கேப்டன் பொறுப்புக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாத சூழலில் சூரியகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி சூரியகுமார் தலைமையில் அபாரமாக செயல்பட்டால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என தெரிகிறது.