ARTICLE AD BOX

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று (பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியின் 5வது போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபகார் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக் களமிறங்கினார். ஃபக்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் அணி சார்பாக, அதிகமாக, சவுத் ஷகீல் அதிக ரன்கள் எடுத்தார். அவர் 76 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். மேலும், கேப்டன் முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் பவுண்டரிகள் உட்பட 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியாவும் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல் தனது பந்துவீச்சு மற்றும் பீல்டிங் திறமையை வெளிப்படுத்தி இமாம்-உல்-ஹக்கை அற்புதமான முறையில் ரன் அவுட் செய்தார்.
பாபர் அசாம் 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். அவர் ஐந்து பவுண்டரிகள் அடித்தார். இமாம்-உல்-ஹக் 10 ரன்களும், சல்மான் ஆகா 19 ரன்களும் எடுத்தனர். குஸ்தில் ஷா 39 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவர் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். முதலில் ஆட்டமிழக்காமல், விளையாடி வந்த பாகிஸ்தான் அணி, மந்தமாக ஆடி வந்த நிலையில், கடைசி நேரத்தில் அடுத்தடுத்த அவுட்டாகி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விக்கெட்களை தூக்கி மாஸ் காட்டிய இந்தியா
ஒன்பதாவது ஓவரில் பாபர் அசாமை (23) ஹார்டிக் அவுட்டாக்கினார். பத்தாவது ஓவரில் இமாம்-உல்-ஹக் (10) ரன் அவுட் ஆனார். 34வது ஓவரில் முகமது ரிஸ்வானை (46) அக்சர் படேல் அவுட்டாக்கினார். 35வது ஓவரில் சவுத் ஷகீலை (62) பெவிலியனுக்கு அனுப்பினார் ஹர்திக் பாண்ட்யா. 37வது ஓவரில் தைப் தாஹிரை (1) ரவீந்திர ஜடேஜா பவுல்டு செய்தார். 43வது ஓவரில் சல்மான் ஆகா (19) மற்றும் ஷாஹீன் அப்ரிடி (0) ஆகியோரை குல்தீப் யாதவ் வெளியேற்றி அசத்தினார்.