ARTICLE AD BOX
IND-NZ: Virat Kohli vs Mitchell Santner: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று மோதுகின்றன. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் இடையேயான போட்டி ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும்.
விராட் மற்றும் சான்ட்னர் இடையே போட்டி
விராட் மற்றும் சான்ட்னர் இருவருமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளனர். விராட் கோலி 217 ரன்களுடன் நான்காவது அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். சான்ட்னர் 27.71 சராசரியுடன் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவாது சிறந்த பந்துவீச்சு 3/43.
சான்ட்னர் பந்தில் மூன்று முறை ஆட்டமிழப்பு
விராட்-சான்ட்னர் போட்டி மிகவும் சமமாக உள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை சான்ட்னர் திணறடித்தார். ஆனாலும் விராட் சான்ட்னருக்கு எதிராக நல்ல புள்ளிவிவரங்களை வைத்துள்ளார். இருவரும் 16 இன்னிங்ஸ்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். விராட் 259 பந்துகளில் 180 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 60.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 69.49. அவர் சான்ட்னருக்கு எதிராக ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்துள்ளார். மூன்று முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.
இந்த மினி போரில் யார் வெற்றி பெறுவார்கள்?
2020 முதல், இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் விராட்டை கட்டுப்படுத்தி தொல்லை கொடுத்துள்ளனர். அவர் 26 இன்னிங்ஸ்களில் 372 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 33.81, 11 முறை ஆட்டமிழந்துள்ளார். அவர் அவர்களுக்கு எதிராக 495 பந்துகளை எதிர்கொண்டு 75.15 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். விராட் இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 15 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் இறுதிப்போட்டியில் சான்ட்னரை விட விராட் கோலியே கெத்து காட்ட அதிகம் வாய்ப்புள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல்(w), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரிஷப் பண்ட்
நியூசிலாந்து அணி: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(c), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், நாதன் ஸ்மித், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி