IND vs BAN: இந்தியா முதலில் பவுலிங்! முக்கிய பாஸ்ட் பவுலர் அதிரடி நீக்கம்!

4 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-வங்கதேச அணிகள் ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில், வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறவில்லை. 

 இந்தியா முதலில் பவுலிங்! முக்கிய பாஸ்ட் பவுலர் அதிரடி நீக்கம்!

'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். 

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியின் 2வது ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் மோதத் தொடங்கியுள்ளன. இதில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி

இந்திய அணியை பொறுத்தவரை அனைவரும் எதிபார்த்தபடியே ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ரிஷப் பண்ட் வந்துள்ளார். அதே வேளையில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார். வருண் சக்கரவர்த்தி இல்லை.  

இந்திய அணியின் பிளேயிங் லெவன்:ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி மற்றும் ஹர்சித் ராணா.

பயிற்சியின்போது 270 கிலோ எடை விழுந்து பளுதூக்கும் வீராங்கனை பலி! பதைபதைக்க வைக்கும் வீடியோ!
 

இந்தியா-வங்கதேசம் மோதல்

வங்கதேச அணி நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையில் களமிறங்குகிறது அந்த அணியில் சவுமியா சர்கார், முஸ்திபூர் ரஹூம், முகமதுல்லா என சிறந்த வீரர்கள் பேட்டிங்கில் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர் மெகதி ஹசன் மிராஸ் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர். பவுலிங்கில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான வங்கதேச அணியின் பிளேயிங் லெவன்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி அனிக், தவ்ஹித் ஹரிதாய், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் 

இந்தியா-வங்கதேசம் போட்டி

இந்தியா வங்கதேச அணிகள் இதுவரை 41 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 32 போட்டிகளிலும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. ஐசிசி தொடர்களை பொறுத்தவரை 6 போட்டிகளில் இந்தியா 5ல் வெற்றி வாகை சூடியுள்ளது. வங்கதேசம் ஒன்றில் வென்றுள்ளது.

WPL 2025: உபி வாரியர்ஸ்சை டெல்லி கேபிட்டல்ஸ் வீழ்த்தியது எப்படி? கலக்கிய 2 வீராங்கனைகள்!

Read Entire Article