IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!

3 hours ago
ARTICLE AD BOX

IND vs AUS Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று அரையிறுதி போட்டியில் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

265 ரன்கள் டார்கெட்:

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கும், ஷமியின் வேகத்திற்கும் இடையில் ஸ்மித், அலெக்ஸ் கேரியின் சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலியா 264 ரன்களை எட்டியது. இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டி என்ற கனவுடன் இந்தியா களமிறங்கியது.  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன்கில் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. ரோகித் சர்மா தந்த 2 கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலியா கோட்டை விட்டது.

விராட் கோலி பொறுப்பான பேட்டிங்:

சுப்மன்கில் 8 ரன்னில் அவுட்டாக, சிக்ஸர் மற்றும் பவுண்டரி என விளாசிய ரோகித் சர்மா 28 ரன்னில் கூப்பர் பந்தில் அவுட்டானார். 43 ரன்களில் 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினர். விராட் கோலி நிதானமாக ஆட ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடினர்.

சிறப்பாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 62 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு விராட் கோலிக்கு 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அக்ஷர் படேல் ஒத்துழைப்பு தந்தார்.

அக்ஷர் அபாரம்:

விராட் கோலி ஓரிரு ரன்களாக எடுக்க அக்ஷர் தொடக்கத்தில் நிதானமாக ஆட பந்துகளை அடித்து ஆட முயற்சித்தார். ஆனால், அவர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதையடுத்து, விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. அரைசதத்தை கடந்த விராட் கோலி மேற்கொண்டு விக்கெட்டு விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிதானமாக ஆடினார். கே.எல்.ராகுல் அடித்து ஆடத் தொடங்கிய நிலையில், விராட் கோலியும் அடித்து ஆட முயற்சித்தார்.

திடீர் பரபரப்பு:

பந்துகளுக்கு ஏற்ப ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி அவுட்டானார். அவர் 98 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா - கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். பந்துக்கு ஏற்றவாறு ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், ஹர்திக் தனது அதிரடியை காட்டினார்.

குறிப்பாக, ஆடம் ஜம்பாவின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். அவர் 24 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்:

இருப்பினும் ஆட்டம் முழுவதுமாக இந்தியா வசம் வந்ததால் இந்தியாவின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தவிர்க்க முடியவில்லை. 12 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். கடைசியில் இந்திய அணி 48 .1 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

14 ஆண்டுகள் சோகம்

இதன்மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும். 2011ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி நாக் அவுட் தொடர்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்ற 14 ஆண்டு சோகத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Read Entire Article