ARTICLE AD BOX
கோவை: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை சென்றார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘‘சென்னையில் நாளை (இன்று) மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அவசரத்தில் பேசக்கூடிய சப்ஜெக்ட் கிடையாது’’ என்று மட்டும் கூறினார்.
‘‘அமித்ஷா வந்து சென்ற பிறகுதான் இந்த மாற்றங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறதே’’ என்று கேட்டபோது, ‘‘அமித்ஷா இன்னும் 2 நாட்களில் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். பிறகு எத்தனை மாற்றம்ணே வரும்’’ என்றார். ‘‘எடப்பாடிகூட எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. நீங்கள் வந்துள்ளீர்களே?’’ என்று கேட்டபோது, ‘‘வேலுமணி அண்ணே பங்சனுக்கு வரனும்னு கூப்டாக. போயிருந்தேன். கல்யாணத்துக்கு போறதுகூட தப்புன்னா எப்படி?’’ என்றார். எடப்பாடி பழனிசாமி திருமண விழாவிற்கு வராதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘அவர் ரிசப்சனுக்கு வருவார்ன்னு நினைக்கிறேன்’’ என்ற கூறிவிட்டு புறப்பட்டுச்சென்றார்.
The post எடப்பாடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அண்ணாமலை appeared first on Dinakaran.