ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பல பரீட்சை நடத்தியது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். அதனை தற்போது பார்க்கலாம். இது குறித்து பேசிய அவர், "எங்கள் அணி பவுலர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டார்கள் என்று நினைக்கின்றேன்."

"ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எங்கு ஒரு சுழற் பந்துவீச்சாளர்களை நல்ல முறையில் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்கள். போட்டியை கடைசி வரை கொண்டு சென்றார்கள். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. சிங்கள் செலுத்தவே நாங்கள் கஷ்டப்பட்டோம்."
"ஆனால் நாங்கள் சிறப்பான பணியை இன்று செய்திருக்கிறோம் என நினைக்கின்றேன். இந்த தொடர் முழுவதும் துபாய் ஆடுகளம் இப்படி தான் செயல்பட்டது. மேலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமாக ஆடுகளம் செயல்பட்டது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. நாங்கள் கூடுதலாக ஒரு இருபது ரன்களை சேர்த்து இருந்திருக்க வேண்டும்."
"ஆனால் முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை நாங்கள் இழந்துவிட்டோம். நாங்கள் மட்டும் 280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் கதையே தற்போது மாறி இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு விக்கெட்டை கூடுதலாக இழந்து விட்டோம் என்று எனக்கு தோன்றியது. எங்கள் அணியில் பல முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது."
"எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே செயல்பட்டார்கள். பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடினார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். எங்கள் அணியில் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பெரிய நிலைக்கு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று ஸ்மித் கூறினார்.