ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செவ்வாய்க்கிழமை முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. துபாயில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி தற்போது தான் இந்த தொடரில் முதல் முறையாக துபாய் வந்து விளையாடுகிறது. இதனால் இந்தியாவுக்கு தான் கூடுதல் சாதகம் என கருதப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் அரையிறுதிக்கு இந்த தொடரில் பயன்படுத்தப்படாத புதிய ஆடுகளம் தான் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் இந்த ஆடுகளம் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சில சமயம் புதிய ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் தோய்வாக, பவுன்ஸ் குறைவாக இருக்கும். இதனால் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சிறப்பான விஷயமாக இருக்கும்.
இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது களம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது சிறப்பான விஷயமாக இருக்கும். அதே சமயம் இரண்டாவதாக சேசிங் செய்வது முற்றிலும் சுலபமாகவும் இருக்காது. டாப் ஆர்டர் வீரர்கள் யாரேனும் கடைசிவரை நின்று ஆங்கர் ரோல் செய்து ரன்கள் சேர்க்க வேண்டும்.
அப்போதுதான் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், முதல் 10 ஓவரில் விக்கெட்டுகள் விழாமல் இந்திய அணி 40 முதல் 50 ரன்கள் எடுக்க வேண்டும். அதன் பிறகு விக்கெட் விழாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துகளை வீணடிக்காமல் அதிகம் சிங்கிள்ஸ் எடுத்து ரன்கள் சேர்க்க வேண்டும்.
கைவசம் விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு கடைசி 20 ஓவர்கள் அதிக ரன்கள் எடுத்து குறைந்தபட்சம் 270 முதல் 300 ரன்கள் அடிக்க வேண்டும். புதிய ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமா? இல்லையா என்பது தெரியவில்லை. இதனால் அதற்கு தகுந்தார் போல் தான் தேர்வு செய்வார்கள்.