IND US Students: அமெரிக்காவின் கெடுபிடி..! இந்திய மாணவர்கள் செய்ய வேண்டியது? - மத்திய அரசு எச்சரிக்கை

7 hours ago
ARTICLE AD BOX

IND US Students: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டு சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிகரிக்கும் கெடுபிடி

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, அமெரிக்க அரசு வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான பதர் கான் சூரி , ஹமாஸிற்கு ஆதரவான பரப்புரையை மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கொலம்பியா பல்கலைக்கழக மாணவி  ரஞ்சினி ஸ்ரீனிவாசனின் விசா, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக ரத்து செய்யப்பட்டது. அவர் கனடாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்திய மாணவர்கள் மீதான அமெரிக்க அரசின் நடவடிக்கை தொடர்பாக, மத்திய வெளியுறவை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, “ மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு இந்தியர்களும் உதவிக்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளவில்லை. விசா மற்றும் குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் உள்ளன. இதுபோன்ற உள் விஷயங்களை முடிவு செய்ய அமெரிக்காவிற்கு உரிமை உண்டு” என தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான அறிவுறுத்தல்:

மேலும், “வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வரும்போது, ​​அவர்கள் எங்கள் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேபோல், இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, ​​அவர்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மாணவர்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உதவ தயாராக உள்ளனர். உதவிக்கரம் நீட்ட விரும்பும் இந்திய மாணவர்கள் யாராவது இருந்தால் நாங்கள் தொடர்ந்து உதவுவோம்.  அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பயின்று வருகின்றனர். அமெரிக்காவுடனான கல்வி உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது” என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கலக்கத்தில் மாணவர்கள்:

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் மாணவர்களுக்கான பல்கலைக்கழக நிதி நிறுத்தப்படும், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அவரது புதிய கொள்கை கல்வி உலகையே உலுக்கியுள்ளது, மாணவர்கள் இப்போது தங்கள் வதிவிட அனுமதியை (Residence Permit) இழக்க நேரிடும் என்று அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதன்படி, 2023-24 ஆம் ஆண்டில் 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நியூயார்க் பல்கலைக்கழகம், கார்னகி மெல்லன் மற்றும் அரிசோனா மாநில பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களின் பிரபலமான தேர்வாக உள்ளது.

Read Entire Article