படிக்கட்டில் காத்திருந்த எமன்; பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாப பலி.!

16 hours ago
ARTICLE AD BOX

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், அச்சிறுபாக்கம், செம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சிவகாமி. இவர், மாமண்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் வேலை பார்க்கிறார்.

நேற்று வழக்கம்போல சிவகாமி அரசுப்பேருந்தில் மாமண்டூர் நோக்கி பயணம் செய்தார். பேருந்து மாமண்டூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

அச்சமயம், சிவகாமி பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டார். அப்போது, திடீரென கால் இடறி சிவகாமி, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையும் படிங்க: கணவர் குறித்து அவதூறு பேசிய கள்ளக்காதலன்.. உறவுக்கு மறுத்த கள்ளக்காதலி கொடூர கொலை..! 

பரிதாப மரணம்

உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையில், சிவகாமியின் உயிர் முன்னதாகவே பிரிந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த படாளம் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு: ஓடும் பள்ளி வாகனத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உதவியாளர் அதிர்ச்சி செயல்.!

Read Entire Article