
பிப்ரவரி 20, புதுடெல்லி (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடர், பாகிஸ்தான் நாட்டில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்ட முதல் ஆட்டம், கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. PAK Vs NZ Highlights: சொந்த மண்ணில் படுதோல்வியை எதிர்கொண்ட பாகிஸ்தான்; வில், டாம், மிட்செல் அபாரம்.! நியூசிலாந்து அசத்தல் வெற்றி.!
பாகிஸ்தான் அணி படுதோல்வி:
பேட்டிங்கில், நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்கள் குவித்து பாக்கிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தனது இலக்கை நெருங்க முடியாமல் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடரில், சொந்தமண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது பாக்., கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாது, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது. PAK Vs NZ: வில் யங், டாம் லாதம் சதம் அடித்து விளாசல்.. சொந்த மண்ணில் திணறிய பாகிஸ்தான்.. 321 ரன்கள் இலக்கு.!
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அபராதம்:
இதனிடையே, போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் பந்து வீசியது சர்ச்சையை சந்தித்துள்ளது. குறைந்தபட்ச ஓவர் ரேட் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கிய பாகிஸ்தான் அணிக்கு, ஐந்து விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தானுக்கு எதிரான ஸ்லொவ் ஓவர் ரேட் (Slow Over Rate Penalty to Pakistan) அபராதம் விதிக்கப்படுகிறது. 5% அபராதம் பாகிஸ்தான் அணிக்கு விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானும், நடுவர்கள் மன்றத்தில் தனது அணியின் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், எந்த விதமான மேல் விசாரணைக்கு இடம் அளிக்காமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Glenn Phillips Catch Taking Moment: அடேங்கப்பா.. என்ன ஒரு கேட்ச்.. பாய்ச்சலுடன் மாயாஜாலம் செய்த கிளன்.!
பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
Pakistan sanctioned after the #ChampionsTrophy opener against New Zealand.
Details ⬇️https://t.co/Smt9hrOZgU
— ICC (@ICC) February 20, 2025