Healthy Chutney Recipes: காலை இட்லி தோசைக்கு சத்தான சட்னி செய்யலாமா! இதோ டபுள் சட்னி ரெசிபி!

4 days ago
ARTICLE AD BOX

இந்த வரிசையில் காலையில் நாம் வழக்கமாக சாப்பிடும் சாப்பாட்டில் கூட அதிக சத்துள்ள உணவுகளை சேர்க்கலாம். அதற்கு சிறந்த உதாரணம் நாம் காலையில் சாப்பிடும் இட்லி மற்றும் தோசைக்கு வழக்கமாக சாப்பிடும் சட்னியை விட ஊட்டச்சத்துக்கள் மிகுந்த சட்னியை செய்து சாப்பிடலாம். அதற்கு பல சத்துக்களை கொண்டுள்ள கொள்ளு மற்றும் எள் சிறந்த தேர்வாகும். இந்த இரண்டு சட்னிகளையும் எளிமையாக நாமே வீட்டில் செய்யலாம். இந்த செய்முறையை  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

எள் சட்னி

தேவையான பொருட்கள்

கால் கப் வெள்ளை எள் 

கால் கப் துருவிய தேங்காய்

ஒரு பல் பூண்டு 

சிறிய அளவிலான புளி 

5 வற  மிளகாய்

கறிவேப்பிலை சிறிதளவு 

கால் டீஸ்பூன் கடுகு

 கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 

2 டீஸ்பூன் எண்ணெய்

தேவையான அளவு உப்பு 

செய்முறை

முதலில் எள்ளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர்  எண்ணெய் ஊற்றாமல் வெறும் கடாயில் எள்ளை நன்கு வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, தேங்காய் துருவல், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, எள்ளுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.இப்போது சுவையான எள் சட்னி தயார்.

கொள்ளு சட்னி

தேவையான பொருட்கள்

1 கப் கொள்ளு 

2 வெங்காயம் 

1 தக்காளி 

6 பல் பூண்டு

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் மல்லிததூள் 

3 பச்சை மிளகாய்

சிறிய அளவிலான புளி 

சிறிதளவு கறிவேப்பிலை 

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு 

செய்முறை

 முதலில்  கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும். இப்போது சுவையான கொள்ளு சட்னி தயார்.  

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article