Headlines|அனைத்துக்கட்சிக் கூட்டம் முதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா வரை!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
05 Mar 2025, 1:25 am
  • மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம். தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் நிலையில் பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு.

  • தமிழக கடற்கரையோரத்தில் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

  • பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு நடக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என நேரடியாக மறுக்காத எடப்பாடி பழனிசாமி.

  • ராமநாதபுரம் தங்கச்சி மடம் மீனவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிக வாபஸ். 21ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாம்பன் பாலம் திறப்பு விழாவன்று முற்றுகைப்போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை

  • முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற நிபந்தனைகளை மீறி சாட்சிகளை மிரட்டுகிறார் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பு வாதம்.

  • மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். மாசி தேரோட்டத்தை முன்னிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்.

  • சென்னை ஈசிஆர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு திட்டம். 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர் மட்ட சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

  • பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி கல்பனா தற்கொலை முயற்சி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

  • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்.

  • ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியதால் மகிழ்ச்சி அடைந்த இந்திய ரசிகர்கள். நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

  • லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கவேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்.

Read Entire Article