ARTICLE AD BOX
Trump: அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்த நாடும் நம் மீது எந்த வரியை விதித்தாலும், நாமும் அவர்கள் மீது அதே வரியை விதிப்போம் என்று கூறினார். அதாவது நாம் விதிப்பதை விட பல நாடுகள் நம் மீது அதிக வரிகளை விதிக்கின்றன என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தியா நம் மீது 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை விதிக்கிறது. சீனா இரண்டு மடங்கு வரிகளை விதிக்கிறது, தென் கொரியா நான்கு மடங்கு வரிகளை விதிக்கிறது, அதே நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு நிறைய இராணுவ உதவிகளை வழங்குகிறோம். ஆனால் ஏப்ரல் 2 முதல், எங்கள் மீது எந்த நாடுகள் எவ்வளவு வரியை விதிக்கிறதோ, அதே வரியை அவர்கள் மீதும் விதிப்போம் என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 1 முதல் இதைத் தொடங்க விரும்பினேன், ஆனால் உலகம், நான் ஏப்ரல் முட்டாள் தினத்தைக் கொண்டாடுகிறேன் என்று நினைக்கக்கூடாது என்று அவர் கூறினார். எனவே, ஏப்ரல் 2 முதல் நான் பரஸ்பர கட்டணத்தை விதிக்கப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா என்னை நம்புகிறது, இப்போது அமெரிக்காவை யாராலும் தடுக்க முடியாது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். பைடனை நாட்டின் மோசமான அதிபர் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், பைடன் நிர்வாகத்தின் கீழ் பொருளாதார அமைப்பு மோசமடைந்ததாகவும், அமெரிக்காவிற்குள் ஊடுருவல் அதிகரித்ததாகவும் கூறினார். அந்தவகையில், குடியேறிகளின் பிரச்சினையை நாங்கள் கட்டுப்படுத்தினோம் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை 43 நாட்களில் செய்து முடித்தோம் என்று டிரம்ப் கூறினார். நாங்கள் USAID-ஐ முடித்துவிட்டோம். இனி அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே இருக்கும். அமெரிக்காவிலிருந்து மூன்றாம் பாலினத்தை ஒழித்துவிட்டோம் என்று பேசினார்.
Readmore: உங்களிடம் எத்தனை UAN நம்பர் உள்ளது?. இதை செய்யாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும்!. எப்படி சரி செய்வது?.
The post இந்தியா மீது ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும்!. அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.