
மார்ச் 04, சென்னை (Chennai News): எவ்வளவு நீண்ட அடர்த்தியாக முடி வைத்திருப்பவராக இருந்தாலும் முடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் முடி கொட்டவும் அல்லது அதன் வளர்ச்சி தடைபடவும் செய்யும். வேலைக்கு செல்ல ஆரம்பித்தால் முடியை சரியாக பாராமரிக்க நேரம் இல்லாதவர்களும் முடி வளர்ச்சி குறைந்து கொண்டே வருபவர்களும், முடியில் வறட்சி தன்மை உடையவர்களும், ஹெர் ஸ்பா செய்து கொள்வது அவர்களின் முடிக்கு நல்லது என ஹேர் ஸ்பா பற்றி நமக்கு அறிமுகம் செய்கிறது அசோக் நகரில் உள்ள, TONI & GUY பிராண்ட்.
எவ்வளவு ரசாயனங்களை முடியில் உபயோகப்படுத்தினாலும், முடியின் வகைக்கும் தன்மைக்கும் ஏற்ப பராமரிப்பு தரவேண்டும். மேலும் ஹேர் ஸ்பா என்பதை பலரும் ஹேர் ஸ்டைலிங் என நினைக்கின்றனர். ஆனால் ஹேர் ஸ்பா ஒரு வகையாக சிகிச்சை முறையாகும். இவைகளுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளது. எந்த காரணத்திற்காக் எதை தேர்வு செய்ய வேண்டும் என நன்கு அறிட்ன்ஹ பின் அவைகளை தேர்ந்தெடுந்தெடுக்க வேண்டும். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!
ஹேர் டிரீட்மெண்ட் vs ஹேர் ஸ்டைலிங்:
ஹேர் டிரீட்மெண்ட் மற்றும் ஹேர் ஸ்டைலிங் என்பது முற்றிலும் வெவ்வேறானது. ஹேர் டிரீட்மெண்ட்டில் ஹேர் ஸ்பா, கெரட்டின், ஸ்மூத்னிங் போன்றவை வரும். ஹேர் ஸ்பாக்கள் சேதார முடியை சரி செய்யும், கெரட்டின் முடிகளுக்கு தற்காலிகமாக புரோட்டின் சத்தை அளிக்கும். ஸ்மோத்னிங் முடிகளின் டெக்சரை நிரந்தரமாக மாற்றும். ஹேர் டிரீட்மெண்ட்டில் முடிகளுக்கு தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
ஹேர் ஸ்டைலிங்கில் ஹேர் கட், கலரிங், போன்றவை அடங்கும்.
ஹேர் ஸ்பா:
ஹேர் ஸ்பாக்கள் பழங்காலத்திலிருந்து பின்பற்றி வந்த ஹேர் கேர் டிரீட்மெண்ட் தான். இது முடியை மென்மையாகவும், சேதமடைந்த முடியை சரி செய்யவும் பயன்படுகிறது. மேலும் இது முடிகளுக்கு மசாஜை தருவதால் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. தலையில் ரத்தவோட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரித்து பலப்படுத்துகிறது. மேலும் சிறந்த தரமான கிரீம்களை பயன்படுத்தி முறையான செயல்முறையுடன் ஸ்பா எடுத்துக் கொள்கையில் முடியில் நல்ல மாற்றமும், வளர்ச்சியும் கிடைக்கும். இது முடியின் வேர்காளில் ஏற்படும் பிரச்சனையையும் குறைக்கிறது.
தலை முடியை அலசி உலர்த்தி, ஹேர் மாஸ்க் போட்டு பின் நீராவியில் முடியை அளித்து பின் மசாஜ் செய்வது போன்ற செயல்முறை பின்பற்றப்படும். இது பொடுகு பிரச்சனையையும் தீர்க்கிறது.
யார்க்கு ஹேர் ஸ்பா?
ஹேர் ஸ்பா, சரியான பராமரிப்பு இல்லாத முடி, வறட்சியாக இருக்கும் முடி, அடிக்கடி தலைக்கு குளிக்க முடியாதவர்கள், முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள் ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம். பொதுவாக அனைவரும் ஹேர் ஸ்பா எடுத்துக் கொள்வது அவரிகளின் முடிக்கு நல்லது.
ஸ்பாக்களில் பல வகைகள் உள்ளது. ஆனால் முடியின் தன்மையைப் பொருத்து ஸ்பாக்கள் செய்யப்படும். ஸ்பிளிட் எண்ட்ஸ் உள்ள முடிகளை கட்டாயம் அதை கட் செய்துவிட்டு ஸ்பா செய்ய வேண்டும். பொடுகு உள்ளவர்களுக்கு ஸ்பாவில் ஸ்டீமிங் செய்யப்படாது. இவ்வாறு ஒவ்வொரு முடிக்கும் ஒருவித ஸ்பா செயல்முறைகளும் அதற்கேற்ற புராடெக்ட்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஹேர் ஸ்பா செய்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சேதமடைந்ததை சரி செய்யவும் முடியும். ஆனால் இதை உடனடியாக செய்ய முடியாது. முடிகளின் தன்மைக்கு ஏற்பவும் அவர்களின் பாரமரிப்பிற்கும் ஏற்ப ஹேர் ஸ்பா சிட்டிங்குகள் அமையும். அதிக ஹெமிக்கல்களையும், ஹீட் சார்ந்த பொருட்களையும் முடியில் பயன்படுத்தி சேதமடைந்திருந்தால் அவைகள் சரியாக அதிகநாட்கள் தேவைப்படும். பாரமரிப்பின்றி இருக்கும் முடிகளுக்கு மாதம் 2 முறை ஸ்பா எடுத்துக் கொள்ள வேண்டும். முடிகள் சரியானால் அவ்வப்போது ஸ்பா செய்து பராமரித்தல் போதும்.
உணவும் கண்டினரும் முடிக்கு அவசியம்:
பார்லரில் ஸ்பாக்கள் செய்தாலும் முடிக்கு ஊட்டசத்துக்கள் எப்போதும் தேவைப்படும். சரியான உணவுப் பழக்கம் முடிகளுக்கு நன்மை தரும். அதோடு பெரும்பான்மையானவர்கள், ஷாம்பு மட்டும் முடிக்கு பயன்படுத்துகின்றனர். அனால் ஷாம்பு பயன்படுத்திய பின் கண்டிஷனர் போட்டுவது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தங்கள் முடிக்கு எந்த வகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் பொருந்தும் என ஆலோசனைப் பெற்று அதை பயன்படுத்தவேண்டும்.