
Rural Agriculture Training (Photo Credit: @backiya28 X)
மார்ச் 04, சென்னை (Chennai News): விவசாயிகள், தரமான காய் உற்பத்தி மற்றும் அதிக மகசூலை பெறுவதற்கு. பூச்சி தாக்குதல் தடையாக உள்ளது.பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காக்க, ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். பூச்சி தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து, வாரம் ஒரு முறை மருந்தடிக்கும் சூழல் நிலவுகிறது.விஷத்தன்மையுள்ள பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் போது, பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Chicken Heat Stress: கோடையில் கோழிகளுக்கு வெப்ப பாதிப்பு.. பாதுகாக்க சில வழிமுறைகள்!
பூச்சிக்கொல்லி தெளிப்பு கவனிக்க வேண்டியவை:
- குளிர்ந்த மற்றும் கடுமையான காற்று வீசும் நேரங்களில், பூச்சிகொல்லி மருந்துகள் தெளிப்பதை தவிர்க்கவும்.
- 32 டிகிரிக்கு மேல் பருவநிலை இருந்தால், வெயில் காலத்திலும் பூச்சி மருந்தை பயன்படுத்தக் கூடாது. வெயிலின் தாக்கத்தினால் மருந்து ஆவியாகி தேவையற்ற இடங்களில் போய் கலந்துவிடும்
- அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தக்கூடாது. அதிக அளவிலான மருந்து, செயலில் பின்தங்குவதோடு, செடிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- குடிநீர் கிணறுகளின் அருகில் செடிகள் இருந்தால், கிணறை மூடிவிட்டு மருந்து தெளிக்க வேண்டும் .
- மருந்து தெளிப்பதற்கு முன், தெளித்தல் அவசியம் தானா என்பதை தெரிந்துகொள்ளுங்கள், சில நேரங்களில் பூச்சிகளுடன், வேறு சில காரணங்களும் செடி பழுதடைய காரணமாக இருக்கலாம்.
- மருந்து தெளிக்க ஏற்ற கால நேரத்தை, தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அதிகாலையில் மருந்து தெளிப்பதால் செடிகள் வாடிப்போக வாய்ப்புண்டு.
- உரத்துடன் சேர்த்து பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கக்கூடாது.