ARTICLE AD BOX
Google Pay செயலியில் பில் செலுத்த இப்படியொரு வசதியா.. என்னென்ன நன்மைகள்? எப்படி பயன்படுத்துவது?
இந்தியாவில் யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக கூகுள் பே செயலி ஆனது ஆரம்பத்தில் சில சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் தற்போது மெல்ல மெல்ல சில சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
அதாவது சமீபத்தில் கூகுள் பே ஆப்பில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் செய்யும் பணப்பரிவர்த்தனை அல்லது கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.

ஆனால் கூகுள் பே ஆப் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமண்ட்களை செய்தால் அப்போது கட்டணம் வசூலிக்கப்படும். கூகுள் பே வெளியிட்ட தகவலின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டகளை பயன்படுத்திச் செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1 சதவீதம் மூதல் 5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய சிலிண்டர் கட்டணம் ரூ.1000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் அதாவது ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனாலும் கூகுள் பே செயலி ஆனது பல பயனுள்ள அம்சங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கூகுள் பே செயலியில் பில்-ஸ்ப்ளிட்டிங் அம்சத்தை (bill-splitting feature) வைத்துள்ளது. இதனால் என்னென்ன பயன்கள் மற்றும் இதை பயன்படுத்துவது எப்படி என்று இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கூகுள் பே bill-splitting அம்சம்:
உதாரணமாக ஒரு திருமணத்திற்கு செல்லும் போது விலை உயர்ந்த கிஃப்ட்-ஐ நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் சேர்ந்து வாங்கி கொடுப்பதாக இருந்தால், சரிசமமாக கிஃப்ட் பில் ஷேர் செய்வதற்கு (பில்லைப் பகிர்ந்துகொள்ள) இந்த பில் ஸ்பிளிட் அம்சம் பயன்படும். அதுவும் ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்கள் இரண்டிலும் GPay மூலம் பில்-ஸ்ப்ளிட்டிங் அம்சத்தைப் பயன்படுத்தலாம். சரி இதை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
வழிமுறை-1 முதலில் உங்கள் கூகுள் பே செயலியை திறந்து, முகப்பு திரையில் மேற்புறத்தில் உள்ள pay contacts எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும். அடுத்து New Group எனும் விருப்பம் தெரியும் அதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2: நீங்கள் New Group கிளிக் செய்ததும், உங்கள் கூகுள் பேவில் உள்ள Contacts லிஸ்ட்-இல் இருக்கும் உங்கள் நண்பர்களை தேர்வு செய்து குரூப் உருவாக்கலாம். அவ்வளவு தான் இதன் மூலம் பில்லை சமமாக, குறிப்பிட்ட சதவிகிதத்தில், குறிப்பிட்ட தொகை அல்லது பங்கு அடிப்படையில் பிரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதில் பில்லை எப்படி பிரிப்பது என்று முடிவு செய்தவுடன், குரூப்-ல் உள்ளவர்களுக்கும் ஒரு கோரிக்கையை அனுப்பலாம். பின்பு குழவில் (குரூப்) உள்ள அனைவருக்கும் கூகுள் பே தானாகவே பேமெண்ட் கோரிக்கையை அனுப்பும். அதை பெறும் உறுப்பினர்கள் தங்கள் மொபைலில் உள்ள ஜிபே மூலம் நேரடியாக தங்கள் பங்கு பணத்தை செலுத்தலாம். பணம் செலுத்தப்பட்டதும், அது குழுவில் குறிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள பங்குகளையும் எளிதாகக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கூகுள் பே செயலியில் இருக்கும் இந்த பில் ஸ்பிளிட் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் கூகுள் பே செயலியில் இன்னும் பல புதிய அம்சங்களைக் கூகுள் நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த செயலியில் உள்ள ஒவ்வொரு அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.