ARTICLE AD BOX
Good Bad Ugly movie update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அசத்தல் அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி சிங்கிள் ரிலீஸ்?
குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் விவாதித்து சிலாகித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்படி வரும் வாரத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
ஒரிஜினல் சம்பவம்
இந்நிலையில், மார்ச் 8ஆம் தேதி, குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் அப்டேட் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பதிவில், குட் பேட் அக்லி படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் வரும் மாமே.. சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயத்தில் இன்று மார்ச் 10 ஆம் தேதி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அசத்தல் அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்த ஜி.வி. பிரகாஷின் எக்ஸ் தள பதிவில், " ஒஜி (ஒரிஜினல்) சம்பவம் இறுதிகட்ட வேலைகளில் சென்று கொண்டிருக்கிறது. சம்பவம் இருக்கு எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் ஜிவி பிரகாஷை கொண்டாடி வருகின்றனர்.
ஃபுல் எனர்ஜியில் ரசிகர்கள்
ஏற்கனேவே படத்தின் டீசரை பார்த்து வைப் ஆன ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்த மாதிரி இருந்தது ஜி.வி பிரகாஷின் இந்த பதிவு. இந்த பதிவு வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே ரசிகர்களிடம் வேகமாகப் பரவியது.
அத்துடன், நேற்று, குட் பேட் அக்லி படத்தின் டீசர் ஒரிஜினல் தீம் மியூசிக் ஸ்பாட்டிஃபையில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கிடைத்த அடுத்தடுத்த அப்டேட்களால் குஷயில் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
எப்படி இருக்கும் சிங்கிள்?
அதுமட்டுமின்றி, குட் பேட் அக்லி படத்திலிருந்து வரும் முதல் சிங்கிளானது நிச்சயம் அஜித்தின் இன்ட்ரோ பாடலாகத் தான் இருக்கும் எனவும், அந்தப் பாடலும் அஜித்தை கேங்ஸ்டராக காட்டப்படுவதால் நிச்சயம் ஜெயிலில் வரும் பாடலாகத்தான் இருக்கும் என ஒருதரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பு, இது ஹீரோ இன்ட்ரோ பாடல் தான். ஆனால் அது அஜித்தின் வரலாறை கூறும் பாடல் போல அமையும். அந்தப் பாடலில் தான் அஜித் பல கெட்டப்களில் வந்திருப்பார் என ஒரு தரப்பும் கூறுகிறது. ஆனால் இதில் எது உண்மை என்று தெரியவில்லை. அனைவரும் யூகத்தின் அடிப்படையில் தான் இதனைக் கூறி வருகின்றனர்.
குஷியில் ரசிகர்கள்
முன்னதாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி வைரலானது. இதுவரை அஜித்தை பார்க்காத கெட்டப்பில் இந்த போஸ்டர் இருந்ததால் அனைவரும் இந்த போஸ்டர்களை கொண்டாடினர்.
மேலும், கடந்த மாதம் வெளியான படத்தின் டீசரும், 24 மணி நேரத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. மேலும், ரசிகர்கள் அஜித்தின் பல்வேறு கெட்டப்களையும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தையும் கொண்டாடினர். இது தான் உண்மையான ஃபேன் பாய் சம்பவம் என்றும் கூறினர்.
