ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/02/18/ElHop9RCM7859M6U4ipZ.jpg)
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/10/23/C8Xnj5foBPr2Fv0HPHQ0.jpg)
கடந்த டிசம்பர் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.
/indian-express-tamil/media/media_files/8O0oOSTKwqoA5JkRfgmD.jpg)
மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக பிப் 1 ஆம் தேதி காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை மாலை ரூ. 360 அதிகரித்தது. அதன் பிறகு இன்று மீண்டும் சவரன் ரூ.64,000 ஐ கடந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/uS7C3Tts0gqD6Ug8XRlX.jpg)
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/dfGvMciIVL1WiFNuoW9P.jpg)
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,738-க்கும், ஒரு சவரன் ரூ. 69,904-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/j6eJMkNkceAvM1m13vWy.jpg)
ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.