உங்கள் அடையாளம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு?

3 hours ago
ARTICLE AD BOX

பொதுவாக தன்னம்பிக்கை வகுப்புகளில் கற்றுத்தரப்படும் அடிப்படை விஷயம் என்ன என்று பார்த்தால் "உங்கள் திறமைகளை அடையாளம் காணுங்கள் அவற்றை மேம்படுத்தி பயன்படுத்துங்கள் வெற்றி உங்கள் காலடியில்" என்பதாகத்தான் இருக்கும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. யாரும் ஒருவரை ஒருவர் தாழ்ந்தவரும் அல்ல. ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவர் அல்ல. ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தப் பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எப்போதும் மகேசும், சுரேசும் கலந்து கொள்வார்கள். அதில் மகேஷ் மட்டுமே எப்போதும் பரிசுகளை பெறுவான். ஆனாலும் சுரேஷ் மனந்தளராமல் அவனுடன் போட்டி போடுவதைப் பார்த்து விளையாட்டு ஆசிரியர் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டார். "எப்போதும் தோற்றுத்தானே போகிறாய் இருந்தாலும் விடாமல் ஏன் போட்டி போடுகிறாய்?."

சுரேஷ் சொன்னான் "மகேசுக்கு சாத்தியமாகும் வெற்றி எனக்கு மட்டும் எப்படி வராமல் போகும்? அவனுடைய நம்பிக்கை உழைப்பு ஆகியவை அவனைவிட சற்று அதிகம் இருந்தால் நானும் வெற்றி பெறுவது சாத்தியம்.அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். விளையாட்டில் ஜெயிப்பதுதான் எனது அடையாளம் நிச்சயம் ஜெயிப்பேன்" ஆசிரியர் வியந்து போனார். சுரேஷ் தனது அடையாளத்தை கண்டு கொள்ளும் இரகசியத்தை தெரிந்து கொண்டான்.

நம்முடைய வாழ்க்கையை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி உன்னதமாக்க கூடிய ஒன்றுதான் நம்முடைய திறமை. அதை அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டியது மட்டுமே நமது கடமை.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகள் அனைத்தும் நன்மைக்கே!
Do you know what your identity is?

கலைவாணனுக்கு சிறு வயதிலிருந்து பெற்றோர் தன்னிடம் தரும் உணவு அல்லது உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பது மிகவும் பிடித்து ஒன்று. அவனுடைய வீட்டுக்கு விளையாட வரும் மற்ற குழந்தைகளுடன் தனது பொம்மைகளை மற்றும் தனது உடைமைகளை தந்து அவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்வது அவன் வழக்கம். இது அவன் பெற்றோருக்கு சற்றே எரிச்சலை தந்தாலும் தன் மகனிடம் ஏதோ ஒரு தனித்திறமை அல்லது மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபாடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அவன் வளர வளர அவனது இந்த உதவி செய்யும் குணமும் வளர்ந்துகொண்டே போனது. இப்போது இளைஞனாய் ஆகிவிட்ட அவன் தேர்ந்தெடுத்த கல்வி என்ன தெரியுமா?

மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க். (MSW Master of Social Work) அவனின் படிப்புத் திறமைக்கு இன்ஜினியரிங் அல்லது மருத்துவத்தை தேர்ந்தெடுக்காமல் தனக்குப் பிடித்த தனது அடையாளமாகிய சேவை மனப்பான்மைக்கு ஏற்ற கல்வியைத் தேர்ந்தெடுத்தான். இன்று கலைவாணன் அந்த ஊரின் மிகச்சிறந்த சேவை பணியாளராக கொண்டாடப்படுகிறார்.

இவர்கள் சில உதாரணங்கள்தான். தனக்கான அடையாளம் எது என்பதே தெரியாமல் குருட்டாம் போக்கில் வாழ்க்கை பாதை சொல்லும் வழியில் போய்க்கொண்டே இருப்பவரால் போய் சேர வேண்டிய இடத்தை நிச்சயம் அடைய முடியாது ஏனெனில் எங்கு செல்லபோகிறோம் என்பதே தெரியாத ஒரு பயணம் அது.

ஆகவே நமக்குள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை அடையாளம் காணும் பணியில் இறங்குவோம் . வெற்றியாளராக சாதித்து காட்டுவோம் நமது அடையாளத்தை பதித்து.

Read Entire Article