Gold Rate Peaks: ஐயோ..போச்சே...வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை...

4 hours ago
ARTICLE AD BOX

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று வரலாறு காணாத புதிய உச்ச விலையை தொட்டுள்ளது.

தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை

ஏற்கனவே இந்த மாதம் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை, கடந்த 19-ம் தேதி சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 64,280 ரூபாய்க்கு விற்பனையானது. அதே நேரம், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் முதன் முறையாக 8,000 ரூபாயை தாண்டி 8,035 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர், 20-ம் தேதி, சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்ச விலைக்கு சென்ற தங்கம், 64,560 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, 21-ம் தேதி 64,200 ரூபாய்க்கு இறங்கிய தங்கத்தின் விலை, 22-ம் தேதி மீண்டும் உயர்ந்து, 64,360 ரூபாய்க்கு சென்றது. அதற்கு அடுத்த நாளும் அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, நேற்று மீண்டும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 64,440 ரூபாய்க்கு விற்பனையானது.

வரலாறு காணாத புதிய உச்ச விலையை தொட்ட தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று(25.02.25) வரலாறு காணாத புதிய உச்ச விலையை தொட்டுள்ளது. அதன்படி, கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 8,075 என்ற புதிய உச்சத்தையும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 64,600 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை தங்கம் அடைந்துள்ளது.

இந்த புதிய உச்சம், தங்கம் வாங்குவோரை பெரும் கவலைக்கு ஆளாக்கியிருக்கிறது. தற்போது திருமண சீசன் வேறு என்பதால், திருமண வீட்டார் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி

இந்நிலையில், வெள்ளி தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஜனவரி மாதத்திலேயே 100 ரூபாயை தாண்டிவிட்ட வெள்ளியின் விலை, இன்று வரையிலும் அதை தாண்டியே விற்பனையாகிவருகிறது. கடந்த 15-ம் தேதி 108 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, 20, 21 தேதிகளில் 109 ரூபாய்க்கு சென்று, 22-ம் தேதி மீண்டும் 108 ரூபாய்க்கு திரும்பியது. அதன்பின் அதே விலையில் நீடிக்கும் வெள்ளி, இன்றும் ஒரு கிராம் 108 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

Read Entire Article