Food: ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு.. பாசிப்பருப்பு பக்கோடா ட்ரை செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்!

4 days ago
ARTICLE AD BOX

Food: ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு.. பாசிப்பருப்பு பக்கோடா ட்ரை செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்!

Chennai
oi-Jaya Chitra
Subscribe to Oneindia Tamil

சென்னை: தின்பண்டங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் வீட்டில் இருக்கும் வாண்டுகளுக்கு மொறு மொறு என்று எதாவது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். ஒரு கப் பாசிப்பருப்பு போதும், டக்குனு இந்த போண்டா செய்து அசத்தலாம்.

பாசிப்பருப்பு போண்டா செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா? முதலில்

Snacks bread food recipe

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

மல்லி விதை - 1 ஸ்பூன்

சோம்பு - 1/2 டீ ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் மல்லி, சோம்பை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். அது ஊறிய பின் நீரை வடித்து, மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் ஏற்கனவே அரைத்த பொடி மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பின்னர் நன்கு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான பாசிப்பருப்பு பக்கோடா ரெடி. மேலும் சுவையை கூட்ட புதினா, கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட ருசியோ ருசிதான். இதை உடனடியாக செய்து பார்த்து எங்களுடன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். (எழுதியவர், சென்னையை சேர்ந்த நமது வாசகி எம். வசந்தா)

More From
Prev
Next
English summary
Food Recipe in tamil: Who doesn't like snacks? And the wands at home will jump for joy if they get something crunchy. A cup of gram dhal is enough and you can make this bonda amazing.
Read Entire Article