ARTICLE AD BOX

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டியை அழைத்துள்ளார். மேலும் பாஜக மற்றும் பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் டிவிஷன் முறையிலும் தோல்வி அடைந்தது. இரண்டு முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் 63 பேர் ஆதரவும், 154 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அந்த தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்பு கோரியிருந்தார் இபிஎஸ். அதிலும் தோல்வியே மிஞ்சியது.
இந்த நிலையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பிலும் டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் அப்பாவு அவைக்கு தலைமை தாங்கினார். மேலும் நடுநிலையோடு சட்டமன்றம் நடைபெறும் என அப்பாவு கூறினார்.