Fire படம் பார்த்து ரிவ்யூ சொன்ன ரசிகர்.. ஃபைன் போட்ட போலீஸ்.. மன்னிப்பு கேட்ட பாலாஜி முருகதாஸ்

4 days ago
ARTICLE AD BOX

Fire படம் பார்த்து ரிவ்யூ சொன்ன ரசிகர்.. ஃபைன் போட்ட போலீஸ்.. மன்னிப்பு கேட்ட பாலாஜி முருகதாஸ்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக தேர்வான பாலாஜி முருகதாஸ் தற்போது ஃபயர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் தன்னுடைய படம் குறித்து ரசிகர்களிடம் ரிவ்யூ கேட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவை பார்த்ததும் போலீசார் அந்த ரசிகருக்கு பைன் போட்டு இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

என்னதான் திறமையும் அழகும் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் சரியான வாய்ப்பு அமைகிறது. எப்படியாவது சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்று பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பாலாஜி முருகதாஸும் ஒருவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஆஹா ஓஹோ என்று இவரை உசுப்பேத்தி பாராட்டியவர்கள் ஏராளம்.

Balaji Murugadoss Vijay TV

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரன்னராக தேர்வான பாலாஜி முருகதாஸுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வரப்பிரசாதமாக அமைந்தது. அவர் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வானார். ஆனாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் இப்போ வரைக்கும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் ஃபயர் திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தனக்கு இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தால் கூட அது தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தியேட்டர் வாசலில் நின்றபடி பாலாஜி முருகதாஸ் கண்கலங்கி அழுதார். அது பெரிய அளவில் வைரலானது.

Balaji Murugadoss Vijay TV

அதுபோல இப்போது பாலாஜி முருகதாஸ் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு போலீஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அதாவது பாலாஜி முருகதாஸ் கார் ஓட்டியப்படியே ரோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அங்கு வரும் ரசிகர்களிடம் பேசி இருக்கிறார். அதில் சிலர் வாகனத்தில் செல்லும்போது முறையாக ஹெல்மெட் அணியாமல், பயணம் செய்திருக்கிறார்கள்.

Balaji Murugadoss Vijay TV

அந்த ரசிகர்கள் பாலாஜி முருகதாஸை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு, "சார் இப்பதான் உங்க படத்தை பாத்துட்டு வரோம். படம் சூப்பர்.. நீங்க நல்லா நடிச்சு இருக்கீங்க" என்று பாராட்டி இருக்கிறார்கள். இந்த வீடியோவை சந்தோஷத்தில் பகிர்ந்த பாலாஜி முருகதாஸுக்கு தான் இப்போது போலீஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது அந்த வீடியோவில் ஹெல்மெட் போடாமல் பைக் ஒட்டிய ரசிகர்களுக்கு போலீஸ் ஆபீஸர்ஸ் ஃபைன் போட்டு இருக்கிறார்கள். அதை நானே செலுத்துகிறேன் என்றும் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டதற்காக தன்னுடைய ரசிகர்களிடம் பாலாஜி மன்னிப்பும் கேட்டு இருக்கிறார். இனியாவது இதுபோல பிரபலங்களை கண்டதும் வாகனங்களில் போகும்போது ஹெல்மெட் போடாமலும், உரிய பாதுகாப்பு இல்லாமலும் பயணிப்பவர்களுக்கு பாடமாக அமையும் என்பது பலருடைய ஆதங்கமாக இருக்கிறது.

More From
Prev
Next
English summary
Balaji Murugadoss, who was selected as a runner -up at Bigg Boss Tamil Season Season Season Season, was currently starring in Fire. He shared a video asking fans about his film. Upon seeing the video, the police have pine for the fan. Let us see in detail what happened.
Read Entire Article