Fact Check: வட இந்தியாவில் தண்டவாளங்களுக்கு இடையே கம்பங்கள் இருக்கிறதா?

18 hours ago
ARTICLE AD BOX

வட இந்தியாவில் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கம்பங்கள் வைத்திருப்பதாக பரவிய காணொளி, இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்று பூம் கண்டறிந்துள்ளது.

இந்த காணொளியில், ஒரு ரயில் தண்டவாளத்திற்கு இடையே கம்பங்கள் இருப்பதை ஒருவர் புகைப்படம் பிடிப்பதையும், இந்த நிகழ்வை கேலி செய்யும் விதமாக சில மீம்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எக்ஸ் தளத்தில் இந்த காணொளியைப் பகிர்ந்த ஒரு பயனர், “இந்திய ரயில்வே துறையை மொத்தமா முடிச்சிட்டானுங்க; வட இந்தியாவில் தான் இந்த கேவலம்”, என்ற கருத்துடன் பகிர்ந்தார்.

இந்திய ரயில்வே துறையை மொத்தமா முடிச்சிட்டானுங்க
வட இந்தியாவில் தான் இந்த கேவலம் pic.twitter.com/RtOJ5DTPR3
— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) March 13, 2025

உண்மைச் சரிபார்ப்பு இந்த காணொளியின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க, காணொளியின் சில பிரேம்களை எடுத்து, நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம்.

இந்திய ரயில்வே துறையை மொத்தமா முடிச்சிட்டானுங்க வட இந்தியாவில் தான் இந்த கேவலம் pic.twitter.com/VzUMJEoqcB
— Akbar Akber (@akber_akba67069) March 15, 2025

இந்த தேடுதலில் hronika.info என்ற ரஷ்ய இணையதளத்திற்கு கொண்டு சென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 24ஆம் தேதியன்று ரஷ்ய மொழியில் வெளியான செய்தியுடன் இந்த காணொளிக்கு ஒத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

ரஷ்ய மொழியில் இருந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் பார்த்தோம். அப்போது, அந்த செய்தியின் தலைப்பு, ”ரஷ்யாவில், தண்டவாளங்களுக்கு இடையில் நிறுவப்பட்ட ரயில் கம்பங்கள்” என்று இருந்தது. மேலும், உக்ரேனிய ஆயுதப்படை அதிகாரி அனடோலி ஸ்டீபன் (Anatoliy Stefan) இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி குறித்து மேலும் தேடுகையில், போலாந்து நாட்டைச் சேர்ந்த sadistic.pl என்ற இணையதளத்திலும், இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளி கீழே சில கமெண்ட்களை ஆராய்ந்தோம். அதில், இது ரஷ்யாவில் உள்ளது என்ற சில கமெண்ட்கள் இருந்தன.

இந்த தண்டவாளம் ரஷ்யாவில்தான் உள்ளதா என்று பூம் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை என்றாலும், இது இந்தியாவில் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

Read Entire Article