Exclusive: "மம்தா பானர்ஜிக்கும் எனக்கும் டாம்&ஜெர்ரி விளையாட்டு".. மனம் திறக்கும் ஆளுநர் ஆனந்த போஸ்!

4 hours ago
ARTICLE AD BOX

Exclusive: "மம்தா பானர்ஜிக்கும் எனக்கும் டாம்&ஜெர்ரி விளையாட்டு".. மனம் திறக்கும் ஆளுநர் ஆனந்த போஸ்!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இடையேயான மோதல் போக்கு நாடறிந்தது. இந்நிலையில், நமது ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ். அதில், மம்தா பானர்ஜி பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மே.வ ஆளுநர் சி.வி. ஆனந்த போஸுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சிவி ஆனந்த போஸ் - முதல்வர் மம்தா பானர்ஜி இடையேயான கருத்து முரண்பாடுகள் ஊரறிந்தவை. சில சமயங்களில் இந்த மோதல் உச்சம் பெற்றுள்ளது.

Mamata Banerjee CV Ananda Bose West bengal

இந்நிலையில், ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் பேசுகையில், "மேற்கு வங்கத்தின் ஆளுநராக நான் பொறுப்பேற்பதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பாம்பு - கீரி சண்டை நடந்து கொண்டிருந்தது. அதனை நான் டாம் ஜெர்ரி விளையாட்ட மாற்ற முயற்சித்தேன். யார் டாம்? யார் ஜெர்ரி என்பது எங்களுக்குள் மாறிக்கொண்டு இருக்கும்.

அதேசமயம், பரமபதம் விளையாட்டும் எங்களுக்குள் நடக்கும். ஒருவர் சட்டென கீழிறங்குவார். மேலே வருவார். முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி எனக்கு பலரும் எச்சரித்தனர். அவரைச் சமாளிப்பது கஷ்டம் எனக் கூறினார்கள். நான் மம்தாவிடம் பேசும்போது நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், நான் உங்களுக்கு எந்த பிரச்சனையையும் உருவாக்க மாட்டேன் எனக் கூறினேன். எனவே ஆரம்பத்தில் எங்களுக்குள் நல்ல இணக்கம் இருந்தது." எனத் தெரிவித்துள்ளார்.

சி.வி.ஆனந்தபோஸின் முழு பேட்டியையும் இந்தச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

More From
Prev
Next
English summary
The conflict between West Bengal Chief Minister Mamata Banerjee and Governor CV Anand Bose has become a hot topic. In this context, West Bengal Governor Anand Bose has given a special interview to One India. In it, he has shared about Mamata Banerjee.
Read Entire Article