ARTICLE AD BOX
எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் குணசேகரன் தன் தங்கை ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாயத் திருமணம் செய்து வைப்பார். அந்த திருமணத்தை நிறுத்த ஜனனி, நந்தினி, ஈஸ்வரி ஆகியோர் (பெண்கள் அணி) பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் ஆதிரைக்கு அவரின் விருப்பப்படி காதலருடன் தான் திருமணம் நடக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்தது. அந்த சீசனின் ஹிட் எபிசோட் அது.
தற்போது அதே போன்று தர்ஷனின் திருமணம் நடக்குமா நடக்காதா என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. கல்லூரி மாணவரான தர்ஷனுக்கு அறிவுக்கரசியின் அப்பாவி தங்கையை திருமணம் செய்து வைக்க கதிர் முடிவெடுக்கிறார். அதற்கு குணசேகரனும் ஒப்புக் கொள்கிறார்.

கயல் சீரியல் நாயகி கயலுக்கு அடுத்தபடியாக அதிகபடியான பிரச்னைகளை எதிர்கொள்வது எதிர்நீச்சல் சீரீயலின் குணசேகரன் வீட்டு பெண்கள் தான். வீட்டிலும் பிரச்னை, சுயத்தொழில் செய்தாலும் பிரச்னை என்பது போல் கதை நகர்கிறது. வீட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் நந்தினி மசாலா பிஸ்னஸ் செய்து வருகிறார். ஆனால் அதனை தடுக்க சதி வேலை நடக்கிறது. ஜனனி உதவியுடன் அந்த தடைகளை நந்தினி உடைத்தெறிகிறார்.
Siragadikka aasai : ரோகிணிக்கு காத்திருக்கும் மூன்று முக்கியப் பிரச்னைகள்! - சிறகடிக்க ஆசை அப்டேட்ஆரத்தி எடுக்க சென்ற அறிவுக்கரசியை தடுத்து, நந்தினி தான் ஆரத்தி எடுக்க வேண்டும் என ஒரு கட்டையை தூக்கி கொண்டு நந்தினியை அடிக்க ஓடுகிறார் கதிர். தான் டெக்ஸ்டைல் இஞ்ஜினியரிங் படித்ததாக அடிக்கடி சொல்லும் நந்தினி இத்தனை அடக்குமுறைகளை பார்த்து கொண்டு அதே வீட்டில் இருப்பது முரண்.இப்போது தர்ஷன் திருமண பிரச்னை தொடங்கிவிட்டது. தர்ஷன் பார்கவி என்ற பெண்ணை கல்லூரியில் காதலித்து ஏமாற்றி தற்போது கதிர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். இந்த விஷயத்தை கண்டறிந்த ஈஸ்வரி, தர்ஷனை நினைத்து வருத்தப்படுகிறார். இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என பெண்களுடன் சேர்ந்து திட்டமிடுகிறார்.
மிரட்டல் பேர்வழியான அறிவுக்கரசி தர்ஷனுக்கு தன் தங்கையுடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என மிரட்டுகிறார். தர்ஷனுக்கே தெரியாமல் இந்த திருமணத்தை நிறுத்தி பார்கவிக்கு நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டுமென ஈஸ்வரி நினைக்கிறார்.

இதனிடையே குணசேகரன் மகன் திருமணத்திற்காக சிறையில் இருந்து வெளிவருகிறார். அவருக்கு ஆரத்தி எடுக்க கதிர் நந்தினியை அழைக்க, அவரின் மகள்கள் வருகின்றனர். வீட்டில் இருந்து எந்த மருமகளும் குணசேகரனுக்கு ஆரத்தி எடுக்கக் கீழே வரவில்லை என கதிர் ஆத்திரத்தில் கத்துகிறார். அந்த சமயம் பார்த்து அங்கு அறிவுக்கரசி வந்து எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக பேசுகிறார். இத்தனை பெண்கள் இருந்தும் இவருக்கு ஆரத்தி எடுக்க ஆள் இல்லையா என்கிறார்.
ஆரத்தி எடுக்க சென்ற அறிவுக்கரசியை தடுத்து, நந்தினி தான் ஆரத்தி எடுக்க வேண்டும் என ஒரு கட்டையை தூக்கி கொண்டு நந்தினியை அடிக்க ஓடுகிறார் கதிர்.
தான் டெக்ஸ்டைல் பொறியியல் படித்ததாக அடிக்கடி சொல்லும் நந்தினி இத்தனை அடக்குமுறைகளை பார்த்து கொண்டு அதே வீட்டில் இருப்பது முரண்.
குணசேகரனின் வருகை பல பிரச்னைகளை கொண்டு வரும், இனி கவனமாக இருக்க வேண்டும் என ஜனனி பெண்களை எச்சரிக்கிறார். மற்றொருபுறம் கதிர் குணசேகருனுக்கே எதிராக சதி செய்து வருகிறார்.
குணசேகரின் ஆணாதிக்கம், கதிரின் சூழ்ச்சி, தர்ஷனின் வீம்பு என அந்த வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. முதல் பாகத்தை போன்றே பெண்கள் அணி தோல்வியை மட்டுமே சந்திப்பார்களா, அல்லது வெற்றிப் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Ethirneechal 2: தொடங்குகிறது`எதிர்நீச்சல் 2'; வெளியான ப்ரோமோ... ஜனனி கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா?