வண்ணமயமான கட்டிடங்கள், பனி படர்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்கு, அழகிய கடற்கரை, பச்சை புல்வெளிகள், படகு பயணங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக்கலைகள் போன்றவற்றை கண்டு ரசிப்பதற்கு நாம் பல்வேறு நாடுகளுக்கு சென்று தான் ரசிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய 10 அற்புதமான இடங்களை நம் நாட்டிலும் காணலாம். இந்தியாவில் இருந்த படியே வெளிநாட்டு டிரிப்பை அனுபவிக்க செய்யும் இந்திய நகரங்கள் இவைகள் தான்.

குல்மார்க்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ள பகுதி ஆகும். இங்கு பனி மூடிய மலைகள் மற்றும் பசுமையான புல்வெளிகளுடன் குல்மார்க், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் போல் காட்சியளிக்கிறது. இங்கு பனிச்சறுக்கு மற்றும் உலகின் இரண்டாவது நீளமான மற்றும் உயரமான கோண்டோலா என்னும் கேபிள் கார் வசதியும் உள்ளது.
கஜ்ஜியார்
இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம் ஆகும். பசுமையான புல்வெளிகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட கஜ்ஜியார் மேற்கு இமயமலையில் உள்ள தௌலதார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு பசுமையான ஏரி, புல்வெளிகள் மற்றும் காடுகள் சுற்றுச்சூழல் அமைப்பானது சுவிட்சர்லாந்து போன்று காணப்படுவதால் மினி சுவிஸ் என்று அழைக்கப்படுகிறது.
புதுச்சேரி
வண்ணமயமான பிரெஞ்ச் பாணியிலான கட்டிடக்கலை, கற்களால் ஆன வீதிகள் மற்றும் கடற்கரையோடு இணைந்த கஃபேக்கள் போன்றவை புதுச்சேரி, ஒரு ஐரோப்பிய நகரத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும்.

ரன் ஆஃப் கட்ச்
குஜராத்தில் உள்ள இந்த ரன் ஆஃப் கட்ச் உலகின் பெரிய உப்பு பாலைவனம் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெளர்ணமியின் போது பொலிவியா நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற சலார் டி யுயுனி போன்று காட்சியளிக்கும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் நிக்கோபார் தீவு அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப்பாறைகள், பசுமை காடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அழகிய தீவுகள் ஆகும். அதிநவீன போட் சவாரிகளும், ஸ்கூபா டைவிங் போன்ற சாகச சவாரிகளும் உள்ளன. இது மாலத்தீவுகள் போன்று காட்சியளிக்கின்றன.

மூணாறு
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலம் மூணாராகும். அழகிய தேயிலைத் தோட்டங்கள், மூடு பனி படர்ந்த மலைகள் காண்பதற்கு ஸ்காட்லாந்தின் அழகிய மலைப்பகுதிகளை காண்பது போன்ற அனுபவம் ஏற்படும்.
சோப்தா
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சோப்தாவில் பனி மூடிய நிலப்பரப்புகள், பைன் மரங்கள் உரைபனி படர்ந்த மலைகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளதால் நார்வே நாட்டில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படும்.
ஆலப்புழா
கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் அதன் காயல் மற்றும் படகு இல்லத்திற்கு பிரசித்து பெற்றது. இது இத்தாலியின் வெனிஸ் கால்வாய் போன்ற அனுபவத்தை தரவல்லது. ஆனால் இங்கு வெப்பமண்டல அழகையும் கொண்டுள்ளது

ஸ்பிட்டி
இமாச்சலப் பிரதேசத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இமயமலையின் உயரமான பகுதி இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையில் உள்ள நிலப்பகுதி. வசீகரிக்கும் பள்ளத்தாக்குகள், பச்சை நிற திட்டுக்களுடன் கூடிய மலைப் பாங்கான குளிர் பாலைவனம், கரடு முரடான நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது.
ஜீரோ
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி. அமைதியான பழங்குடி மக்களின் கலாச்சாரத்துடன் காணப்படும் இப்பள்ளதாக்கு மொட்டைமாடி நெல் வயல்களுக்கு புகழ்பெற்றது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet