ARTICLE AD BOX

நடிகர் அஜித்: சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித்தின் நடிப்பில் கடந்த ஆறாம் தேதி வெளியான திரைப்படம் விடா முயற்சி. முதன் முறையாக மகிழ்திருமேனியும் அஜித்தும் இணைந்து உருவான கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் விடா முயற்சி. அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது .முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நம்பிப்போன ரசிகர்களுக்கு இந்த படம் வெறும் ஏமாற்றத்தை தான் தந்தது.
சுமாரான வரவேற்பு: ஒரு குடும்ப பங்கான படத்தை மகிழ் கொடுத்திருந்தார் .இது ஏகே ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அதுவரை அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் அதிர்ச்சியே காத்திருந்தது. அதனால் விடா முயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது .அது மட்டுமல்ல வசூலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
லைக்காவுக்கு அடிமேல் அடி: லால் சலாம் இந்தியன் 2 போன்ற படங்களினால் தொடர் சரிவுகளையே சந்தித்து வந்த லைக்காவுக்கு விடாமுயற்சி திரைப்படம் மேலும் ஒரு சரிவை ஏற்படுத்தியது. விடா முயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது.
ஒரே நேரத்தில் இரு படங்கள்: இந்தப் படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார் .சமீபத்தில் தான் திரிஷாவின் குட் பேட் அட்லி படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் ரம்யா எனும் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் இரவு பகலாக தூங்காமல் தொடர்ந்து பத்து நாட்கள் நடித்துக் கொடுத்தார் அஜித்.
ரேஸ்தான் முக்கியம்: மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஒரேடியாக ரேஸில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அஜித் தூங்காமல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து நடித்து கொடுத்துவிட்டு தான் போனார். தற்போது ஸ்பெயினில் நடக்கும் கார் ரேஸில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த கார் ரேசில் கூட இவருடைய அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.
அப்போது அஜித் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரேஸ் சமயத்தில் படங்களில் நான் கவனம் செலுத்த மாட்டேன் .மொத்தமாக ரேஸ் முடிந்த பிறகு தான் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை .தற்போது திரிஷா சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

அதுபோக அஜித் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியும் படமாக வேண்டி இருக்கிறதாம். கார் ரேஸுக்காக ஒவ்வொரு நாடாக சென்று கொண்டிருக்கும் அஜித்தை எப்படி தொடர்பு கொண்டு இந்த படத்தின் காட்சியை ஆதிக் முடிக்க போகிறார் ,சொன்ன தேதியில் படம் வெளியாகுமா, இல்லையெனில் தனது தீவிர ரசிகராகிய ஆதிக்கிற்காக அஜித் ஒரு நாள் வந்து இந்த படத்திற்காக நடித்துக் கொடுத்துவிட்டு போவாரா என்றெல்லாம் தற்போது கேள்வி எழுந்து வருகிறது. என்ன செய்யப் போகிறார் ஆதிக் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.