Erode By-Election Result Live : பரபரத்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் - நாளை வாக்கு எண்ணிக்கை!

2 hours ago
ARTICLE AD BOX

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2021-ல் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடந்தாண்டு டிசம்பரில் உயிரிழந்ததைத்தொடர்த்து, அத்தொகுதி காலியானது. பின்னர், பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் விலகுவதாக அறிவித்தன. இதனால், பிரதான காட்சிகளாக தி.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கின.

திமுக விசி சந்திரகுமார், நாதக சீதாலட்சுமி

2011-ல் இதே தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு வென்ற சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க களமிறக்க, சீதாலட்சுமி என்பவரை நா.த.க வேட்பாளராக நிறுத்தியது. பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தமாக, 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இதுவொரு சிறிய முன்னோட்டமாக இருப்பதால், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், நாளை காலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது.

Read Entire Article