ARTICLE AD BOX
நிறுவனங்களில் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பில் EPFO கணக்கு தொடங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் EPFO-வில் புதிதாக இணைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தொழில் உற்பத்தி துறையில் முதன்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் முதல் சந்தாவை அரசே செலுத்திவிடும். அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ரூ.3 ஆயிரம் அரசு செலுத்தும்.
EPFO-வில் பதிவு செய்து முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை 3 தவணைகளில் மத்திய அரசே அவர்களின் கணக்கில் செலுத்தும். அதிகபட்சமாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் வரை செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதம் ஒரு லட்சம் சம்பளமாக இருக்கும். அதன்படி, பிப்ரவரி மாதத்தில் இணைந்த 15 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.3000இல் இருந்து செலுத்தப்படும். இது அவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செல்லாமல் பிஎஃப் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ATM மூலம் PF பணம்
இப்போது EPFO 3.0 திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிஎஃப் பணம் எடுப்பது கடினமாக இருப்பதால், இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, இனி வங்கி ஏடிஎம் போலவே, பிஎஃப் சந்தாரர்களுக்கும் ஏடிஎம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
The post EPFO ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.3,000 வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.