முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி! 

3 hours ago
ARTICLE AD BOX
X down - Elon musk

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர் என பதிவிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை எக்ஸ் தளவாசிகள் ட்ரெண்ட் செய்து தாங்கள் சந்தித்த இடையூறுகளை பதிவிட்டு வருகின்றனர். சுமார் 90 நிமிடங்கள் இந்த எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அது சரி செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு மீண்டும் சில மணிநேரத்தில் எக்ஸ் முடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்திய பயனர்கள் மாலை 4 மணி முதல் சில மணிநேரங்களுக்கு இந்த பாதிப்பபை உணர்ந்துள்ளனர்.  இந்த சேவை பாதிப்பு குறித்து எக்ஸ் தளத்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும், விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article