ARTICLE AD BOX
Dragon: டிராகன் படம் SKவின் அந்த படம்னு நெனச்சுக்கோங்க.. பிரதீப் ரங்கநாதன் பளீச்!
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் படம் இன்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு முன் பதிவில் அதிகப்படியான டிக்கெட்டுகள் புக் ஆகியிருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பதை உறுதி செய்தது. படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், வி.ஜே. சித்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டிரைலர் வெளியான பின்னர் இது டான் படத்தைப்போல் உள்ளது என பலரும் கூறி வந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் பேட்டி ஒன்றில், இது டான் படத்தின் இரண்டாம் பாகம் தான் எனக் கூறியுள்ளார்.
டிராகன் படம் காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய வாரத்தில், விடாமுயற்சி ரிலீஸ் ஆனதால், 21ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது . படத்தை இந்தியாவில் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், படம் சிவகார்த்திகேயனின் டான் படத்தைப் போல் உள்ளது என விமர்சித்தார்கள். ஆனால் இது தொடர்பான விமர்சனங்களுக்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, டிரைலரில் உள்ளது படத்தின் 10 சதவீத காட்சிகள் தான். டிரைலரில் நாங்கள் மொத்த படத்தையும் கூறவில்லை என பதில் அளித்திருந்தார்.

படத்தில் நடித்துள்ள வி.ஜே. சித்துவின் யூடியூப் சேனலுக்கு பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து அளித்த பேட்டியில், இது தொடர்பாக தெளிவாக பேசியுள்ளார்கள். அதாவது இவர்களின் பதில் ரசிகர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளது. அதாவது, இந்தப் படம் வாரணம் ஆயிரமா? குஷியா? இல்லை மீசையை முறுக்கா? என கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு அஸ்வத் மாரிமுத்து பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது, படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் இது டான் 2 எனக் கூறினார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டான் 2: பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத, அஸ்வத் மாரிமுத்து, விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் சிரித்தனர். மேலும் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து பேசுகையில், நீங்க கதையைச் சொல்ல சொல்ல இது டான் 2 தானோ என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து என்ன கூறுவார் என எனக்குத் தெரியும். அதாவது, டிரைலரில் நாங்க காட்டியது 10 சதவீத கதைதான். மீதியை ரசிகர்களின் அனுபவத்திற்காக அப்படியே வைத்துள்ளோம். அந்த மீதி கதை என்னவென்றால் டான் 2 எனக் கூற மீண்டும் அனைவரும் சிரித்தார்கள்.
நண்பன்: படம் குறித்து மேலும் பேசும்போது, இந்தப் படத்தை விஜய்யின் நண்பன் படம் எனக் கூறுகிறார்கள். நண்பன் படத்தில் இன்ஜினியரிங்கை மாற்ற நினைக்கும் மாணவர், அவரை எதிர்க்கும் பேராசிரியர். நண்பன் படத்தில் சத்யராஜ், இந்தப் படத்தில் மிஷ்கின் என வி.ஜே. சித்து சொல்லி அஸ்வத் மாரிமுத்துவை மொத்தமாக கலாய்த்து விட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டிராகன் படம் டான் 2 என பிரதீப் ரங்கநாதன் கூறியது குறித்து, ரசிகர்கள், இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் எனக் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.