Dragon OTT Release : டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

20 hours ago
ARTICLE AD BOX

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Dragon OTT Release on Netflix : தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தார். லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து டிராகன் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார் பிரதீப். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கினார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கி இருந்தார்.

Pradeep Ranganathan

டிராகன் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். டிராகன் திரைப்படத்தில் விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கே.எஸ்.ரவிக்குமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

இதையும் படியுங்கள்... ரிலீசாகி 25 நாளாகியும் குறையாத கூட்டம்; பாக்ஸ் ஆபிஸில் அடுத்த மைல்கல்லை நெருங்கும் டிராகன்!

Dragon Movie Box Office

டிராகன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களை மிகவும் கவர்ந்தது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்ற டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படமாக டிராகன் மாறி உள்ளதோடு, பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக திகழ்ந்து வருகிறது.

Dragon OTT Release Date

இந்நிலையில் டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மார்ச் 21ந் தேதி டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தியேட்டரை போல் ஓடிடியிலும் டிராகன் படம் பல்வேறு சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 20 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய டிராகன்!

Read Entire Article