Dragon First Half Review: டிராகன் முதல் பாதி விமர்சனம்.. வேற லெவல் சம்பவம்.. பாக்ஸ் ஆபிஸ் ஹிட் உறுதி

3 days ago
ARTICLE AD BOX

Dragon First Half Review: டிராகன் முதல் பாதி விமர்சனம்.. வேற லெவல் சம்பவம்.. பாக்ஸ் ஆபிஸ் ஹிட் உறுதி

News
oi-Mohanraj Thangavel
| Published: Friday, February 21, 2025, 11:58 [IST]

சென்னை: ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள டிராகன் படம் இன்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்தின் முதல் பாதி எப்படி உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Dragon Pradeep Ranganathan Dragon First Half Review

படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன போது ரசிகர்கள் பலரும் பல படங்களை குறிப்பிட்டு, அந்த படங்களைப் போல் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் டான் படத்தை போல இருக்கு எனக் கூறினார்கள். இது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிரதீப் ரங்கநாதன், இது டான் படத்தின் அடுத்த பாகம் போலத்தான் இருக்கும் என நகைச்சுவையாக கூறினார்,

Dragon Pradeep Ranganathan Dragon First Half Review

முதல் பாதி: படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் எப்படி உள்ளது என்பதை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் படத்தின் முதல் பாதி குறித்து பலரும் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளனர். அதில் ஒரு ரசிகர், " படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் அட்டகாசமான திரைக்கதையுடன் சூப்பராக உள்ளது. படக்குழுவினர் கூறியதை போலவே, படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. முதல் பாதி முழுவதும், ஒரு காட்சி கூட படத்தின் வேகத்தை குறைப்பது போல இல்லை.

Dragon Pradeep Ranganathan Dragon First Half Review

சம்பவம்: பிரதீப் ரங்கநாதன் ஒவ்வொரு காட்சியிலும் அவரது உடல் மொழி மற்றும் நடிப்பினால் படத்தின் தரத்தை கூட்டுகிறார். இவரது அட்டகாசமான நடிப்பினால் படத்தின் தரம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. மிஷ்கின், கௌதம் மேனன், கயாடு லோஹர் சிறப்பாக அவரவர் கதாபாத்திரங்களுக்கு பொருந்திப் போயுள்ளார்கள். அனுபமா பரமேஸ்வரனுக்கு போதுமான அளவிற்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் இல்லை. லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. டிராகன் முதல் பாதி வேற லெவல் சம்பவம்" என குறிப்பிட்டுள்ளார்.

Dragon Pradeep Ranganathan Dragon First Half Review

பாக்ஸ் ஆபிஸ்: அதேபோல் படத்தின் முதல் பாதி அட்டகாசமாக உள்ளது. படத்தின் திரைக்கதை சிறப்பான அட்டகாசமான காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி மற்றும் அலுவலக காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராகவன் கதாபாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு உள்ளது. ராகவன் கதாபாத்திரத்தை கொண்டு முதல் பாதியை நிறைவு செய்துள்ளது அருமை. வி.ஜே. சித்துவின் காமெடி நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி உள்ளது என பதிவிட்டுள்ளார். படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dragon Pradeep Ranganathan Dragon First Half Review
Dragon Pradeep Ranganathan Dragon First Half Review
Dragon Pradeep Ranganathan Dragon First Half Review

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Dragon Dragon First Half Review Fans Appreciates Pradeep Ranganathan Ashwath Marimuthu Combo
Read Entire Article