ARTICLE AD BOX

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இருக்கிறது.இந்த குப்பம் விழாவில் கலந்து கொள்ள சாதுக்கள், துறவிகள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நாள்தோறும் வந்து குவிந்துள்ளார்கள். அந்த வகையில் சினிமா நட்சத்திர பிரபலங்களான பவன் கல்யாண், தமன்னாஉள்ளிட்ட பலரும் வந்து இங்கே நீராடினார்கள்.
தற்போது மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கத்தரினா கபூர் தன்னுடைய குடும்பத்தோடு திருவேனி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார். கும்ப விழாவில் இதுவரை 60 கோடி பக்தர்கள் திருவேனி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.