ARTICLE AD BOX
யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்.. கமல் ஹாசனுக்கு அறிவுரை சொன்ன வைரமுத்து.. செம சந்திப்பு
சென்னை: தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்கவே முடியாதவர் வைரமுத்து. இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 7 தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இளைய பாடலாசிரியர்களுக்கு போட்டியாக இப்போதும் திகழ்ந்துகொண்டிருக்கும் அவர்; கமல் ஹாசனை சமீபத்தில் சந்தித்திருக்கிறார். அதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
வைரமுத்து தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்க முடியாத ஆளுமை. 7000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எழுத்துக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்தவர். அரசு பணி செய்துகொண்டிருந்த அவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து; பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான நிழல்கள் படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என்று எழுதி மெர்சல் செய்தார்.

ராஜாவும், முத்துவும்: முதல் பாடலிலேயே ரசிகர்களை மட்டுமின்றி இளையராஜாவையும் கவர்ந்துவிட்டார். இதன் காரணமாக ராஜாவின் கோட்டைக்குள் ஆஸ்தான கவிஞராக மாறினார் வைரமுத்து. இரண்டு பேரும் இணைந்து, புன்னகை மன்னன், சிந்து பைரவி, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என ஏராளமான படங்களில் பணிபுரிந்தார்கள். அவர்கள் இருவரும் இணைந்த பாடல்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டணி பல மேஜிக்குகளை நிகழ்த்தியது என்பது உண்மை.
உடைந்த கூட்டணி: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்த கூட்டணி சில காரணங்களால் உடைந்தது. அதுகுறித்த விளக்கத்தை இரண்டு பேருமே இதுவரை சொல்லவில்லை. அவர்களை சேர்த்துவைக்க பலர் முயன்று பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. தொடர்ந்து இருவரும் தங்களது பணியில் பிஸியாக இருந்து பெரும் ஆளுமைகளாக உருவெடுத்திருக்கிறார்கள். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தொடர்ந்து பணியாற்றிவந்த வைரமுத்து; இப்போது அவருடனும் பணியாற்றுவதில்லை. ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியிலும் எக்கச்சக்கமான பாடல்கள் ஹிட்டாகியிருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல.. திருமணத்துக்கு பின் இப்படியா?
கமலை சந்தித்த வைரமுத்து: சில படங்களுக்கு பாடல்கள் எழுதிவரும் வைரமுத்து சமீபத்தில் கமல் ஹாசனை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "நாளாயிற்று நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.
"செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா" என்றார் செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன்; ஆனால் அதில் ஜீவன் இல்லை" என்றேன் அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். "நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்" என்றேன் டெல்லிப் பட்டணத்திற்கான
சமிக்ஞை தெரிந்துகொண்டேன் மகிழ்ந்து விடைகொண்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Vidamuyarchi OTT: வலிமையை விட மோசம்.. 3 வாரங்களில் ஓடிடிக்கு ஓடி வரும் விடாமுயற்சி.. பாவம் லைகா!