ARTICLE AD BOX
DAREDEVIL BORN AGAIN(3 / 5)
மேயராக மாறியிருக்கும் கேங்ஸ்டர் வில்சன் ஃபிஸ்கிற்கும், டேர்டெவில் மேட் முர்டாக்கிற்கும் இடையே நடக்கும் யுத்தமே , ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் DAREDEVIL BORN AGAIN தொடரின் ஒன்லைன்.
நெட்பிளிக்ஸில் தான் முதல் முறையாக மார்வெல்லின் டேர்டெவில் தொடர் வெளியானது. அதே காலகட்டத்தில் வெளியான மார்வெல்லின் ஏஜெண்ட்ஸ் ஆஃப் ஷீல்டுக்கு எப்படியொரு தனித்த ரசிகர் பட்டாளம் இருந்ததோ, அதே போல் டேர்டெவிலுக்கும் தனித்த ரசிகர் பட்டாளம் உண்டு. டேர்டெவிலாக சீரிஸில் வந்த மேட் முர்டோக், இதே கதாபாத்திரத்தை திரைப்படங்களிலும் ஏற்று நடித்தார். ஹாட்ஸ்டாரின் தொலைக்காட்சித் தொடர்களிலும் அதே வேடத்தில் தொடர்ந்தார். கேங்ஸ்டர் ஃபிஸ்க்காக வரும் வின்சென்ட்டும் ஹாட்ஸ்டார் தொடர்களான HawkEye, எக்கோவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இப்படியாக நெட்பிளிக்ஸ் தொடர் முடிந்த பின்னும் இருவரும் மார்வெல் கதைகளை சுற்றி சுற்றி வந்துகொண்டே தான் இருந்தார்கள். தற்போது DAREDEVIL BORN AGAIN என இந்த சீரிஸை ரீபூட் செய்திருக்கிறது மார்வெல். மீண்டும் அதே நடிகர்கள். வின்சென்ட் மட்டும் சற்று எடை அதிமாகியிருக்கிறார்.
மேட் முர்டாக், ஃபாகி, கேரன் மூவரும் நிம்மதியாக ஒரு இடத்தில் இருந்து வெளியேற எங்கோ ஆபத்து என்கிற அவலக்குரல் கேட்கிறது. மேட் முர்டாக் , டெர்டெவிலாக உருமாறி அந்த இடத்திற்கு விரைய துப்பாக்கி குண்டு துளைக்க கொல்லப்படுகிறார் மேட் முர்டாக்கின் உயிர்த்தோழரான ஃபாகி நெல்சன். டேர்டெவில் முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு முழு நேர வழக்கறிஞராக வாழ்கிறார் மேட் முர்டாக். கேங்ஸ்டர் வில்சன் ஃபிஸ் மேயராக வர, அடுத்து நடக்கவிருக்கும் ஆபத்துகள் குறித்து அனுமானிக்கிறார் மேட் முர்டாக்.
முதல் சில எபிசோடுகள் ஒயிட் டைகர் சுற்றி நகர்ந்தாலும், பனிஷராக ஜான் பெர்ந்தால் வந்ததும் சீரிஸ் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. பெர்மானஸாகவும் சார்லி காக்ஸ், வின்சென்ட்டிற்கு அடுத்தபடியாக கவனம் ஈர்ப்பது ஜான் பெர்ந்தால் தான். முந்தைய சீசன்களில் டேர்டெவிலுக்கு உறுதுணையாக இருந்தது ஃபாகியும் கேரனும் என்றால் இந்த் சீசனில் அந்த பொறுப்பு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி செர்ரிக்கும், கிர்ஸ்டனுக்கும் வருகிறது.
பிரதான கதாபாத்திரங்களுக்கு முந்தைய சீசன்களில் இருக்கும் கனெக்ட் போதாதென்று, கூடுதலாக சிலருக்கும் அப்படியானதொரு கனெக்ட்டை விடாப்படியாக இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். டேர்டெவிலில் வரும் பத்திரிகையாளரான பென் யூரிச்சின் உறவினர் என இந்த சீசனில் ஜெனயா வால்டன் அறிமுகமாகிறார். இப்படியாக சில கனெக்ட்டையும் உருவாக்கியிருக்கிறார்கள். டேர்டெவில் வெர்சஸ் ஃபிஸ்க் ~ இந்த இருவரின் கறுப்புப் பக்கங்களுக்குள் நிகழும் யுத்தமே இந்த சீசன் என்றாலும், 2015ம் ஆண்டு வெளிவந்த சீசன் அளவுக்கு இது சுவாரஸ்யம் தரவில்லை என்பதுதான் உண்மை. அடுத்த சீசனில் இதையெல்லாம் சரி செய்வார்கள் என்பதை நம்புவோம்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் முதலிரண்டு எபிசோடுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோடு வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.