Curry Leaves Rice : கீழே வீசும் கறிவேப்பிலையில் இவ்வளவு சுவையான சாதமா.. ஈசியா எப்படி செய்யலாம் பாருங்க!

4 days ago
ARTICLE AD BOX

கறிவேப்பிலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 4 கைபிடி

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

வேர்க்கடலை - 3 கைபிடி

உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்

வெந்தயம் 1/4 டீ ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

எள்- 2 டீ ஸ்பூன்

மிளகு - 10

மிளகாய் வத்தல் - 6

பெருங்காயம் -1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்

முந்திரி பருப்பு -10

கடுகு உளுந்து - 1 ஸ்பூன்

பூண்டு -10 பல்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

வேக வைத்து எடுத்த சாதம் - ஒரு கப்

செய்முறை

முதலில் ஒரு கடாயை சூடாக்கி அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும்.

இப்போது 2 ஸ்பூன் கடலைபருப்பு, 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு, ஒரு கைபிடி நிலக்கடலை, 10 மிளகு, 1 ஸ்பூன் சீரகம், 6 மிளகாய் வத்தல், 2 ஸ்பூன் எள், 1/4 ஸ்பூன் வெந்தயம், சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் கழுவி காய வைத்த கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடைசியாக அதில் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அந்த பொருட்கள் நன்றாக வாசம் வர ஆரம்பித்த உடன் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள்.

வறுத்த பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு இதை மிக்ஸ் ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து சேர்க்க வேண்டும். அதில் 10 பூண்டு பற்களை இடித்து சேர்த்து கொள்ள வண்டும். ஒரு மிளகாய் வத்தல், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் 2 கைபிடி நிலக்கடலை, 10 முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். முந்திரி பருப்பு நிறம் மாறும் போது நாம் வேக வைத்து எடுத்த சாதத்தை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். இப்போது ஏற்கனவே நாம் வறுத்து அரைத்த பொடியை தேவையான அளவு சாதத்துடன் சேர்க்க வேண்டும். உப்பை ருசி பார்த்து தேவைக்கு ஏற்ப சேர்க்க வேண்டும் . அவ்வளவு தான் ருசியான கறிவேப்பிலை சாதம் ரெடி. விருப்பம் உள்ளவர்கள் அதில் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article