CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”

3 days ago
ARTICLE AD BOX

CM Stalin: உலக தாய்மொழி தினத்தை ஒட்டி தமிழை போற்றி, “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்:

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!” என குறிப்பிட்டுள்ளார்.

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!

இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!

அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும்… pic.twitter.com/qz9vW730HN
— M.K.Stalin (@mkstalin) February 21, 2025

அதோடு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் மையநோக்கு விளக்கப்பாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி திணிப்பு பிரச்னை:

மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தினால் தான், கல்விக்கான நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவோம் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், இந்தி திணிப்பை உள்நோக்கமாக கொண்டு, புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. மாற்றுவழியில் மும்மொழிக்கொள்கையை பாஜக புகுத்துவதாகவும் விமர்சித்து வருகிறது. திமுக மொழியை வைத்து அரசியல் செய்வதாகவும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடி வருகிறார். இதனால் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. #GETOUTMODI, #GETOUTSTALIN போன்ற ஹேஷ்டேக்குகளை எதிரெதிர் தரப்பினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் தான், ”எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். க

Read Entire Article