ARTICLE AD BOX
சென்னையில் உள்ள படூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி செயல்படுகிறது. கல்லூரியில் பேராசிரியராக சஞ்சு ராஜ் என்பவர் பணியாற்றுகிறார்.
பாலியல் தொல்லை
பேராசிரியர், அதே கல்லூரியில் வேலை பார்த்து வரும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மாணவி ஒருவரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலி பெயரில் போலி பத்திரம் பதிந்து நிலம் அபகரிக்க முயற்சி; 72 வயது முதியவர் கொலை வழக்கில் திடுக்.!
இந்த விஷயம் குறித்து பேராசிரியை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதனிடையே, பேராசிரியைக்கு ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது கல்லூரியில் பரவியது.
பேராசிரியர் கைது
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், சஞ்சு ராஜை பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் அவரின் சட்டையும் கிழிந்தது.
பின் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசரனை நடத்தினர். பெண் பேராசிரியர் கொடுத்த புகாரின் பேரில், சஞ்சு ராஜ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., குற்றவாளி ஞானசேகரன் விவகாரம்; மேலும் புதிய வழக்கு.. அதிகாரிகள் விசாரணை.!